“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“
0 min read