UNLEASH THE UNTOLD

Month: April 2024

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

உடலும் மனமும் கொடுக்கும் சிக்னலைப் புரிந்துகொள்வது எப்படி?

சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.

6. ஆன்ட்டி ஹீரோ அலப்பறைகள்

ஆன்ட்டி ஹீரோக்களின் அக்மார்க் பணக்காரத் திமிர் பிடித்த நாயகன் சுதாகர். கம்பீரமான, கவர்ச்சிகரமான தோற்றம் உடையவன். அவனைத் தற்செயலாகச் சினிமா அரங்கத்தில் பார்க்கிறாள் மாயா. பொதுவெளியில் அநாகரிகமாக ஒரு பெண்ணை அவன் அணைத்தபடி நின்றிருந்த விதம் மாயாவை எரிச்சல்படுத்துகிறது. ஆரம்பப் பார்வையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகிறது.

சினிமாவுக்கு வாரீகளா? - 2

1951 முதல் 1960 வரை ‘சினிமாவுக்கு வாரீகளா? – 2, 1951 முதல் 1960 வரையுள்ள திரைப்படங்கள்’ கட்டுரைகள் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன. வனசுந்தரி வனசுந்தரி 1951 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கிருஷ்ணா…

முத்துக்குட்டி முதல் அய்யா வைகுண்டர் வரை - 2

‘காணிக்கையிடாதீங்கோ காவடிதூக்காதீங்கோ
மாணிக்கவைகுண்டம் வல்லாத்தான் கண்டிடுங்கோ
வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில்போடாதீங்கோ
நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே…’

களவு போகும் கனவுகள்

அறிந்துவைத்திருந்த அவரது மேற்பார்வையாளர் ஆர்தர் டீன், ஆலிஸின் ஆய்வுமுடிவுகளைத் தன் பெயரில் வெளியிட்டார். “டீன் முறை” என்கிற பெயரில் அந்தச் செயல்முறை பிரபலமாகத் தொடங்கியது. ஆலிஸின் பங்களிப்புகள் அடுத்த தொண்ணூறு ஆண்டுகளுக்கு வெளியில் தெரியவில்லை. பலரது போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக 2000ஆம் ஆண்டில் அவரது கண்டுபிடிப்பை ஹவாய் பல்கலைக்கழகம் அங்கீகரித்தது.

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

ஆயிரம் காலத்துப் பயிர்

4000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட திருமணம் எனும் சமூக கட்டமைப்பு இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.