UNLEASH THE UNTOLD

Year: 2023

தாய்வழி வந்த தங்கங்கள்

“பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை” என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு.

எங்க ஆத்தா மாரியாத்தா - ஜெஜெ சில குறிப்புகள்

எங்க ஆத்தா மாரியாத்தாஅந்த அம்மா என்ன பண்ணாலும் ‘வாவ்’ அப்டின்னு செருப்படி வாங்கறவனைக்கூட நம்ப வைக்கற அதோட சக்தி சக்திமான்க்கு கூட இல்ல…

ஐ லவ் யூ சொல்லலாமா?

“அம்மா, கல்யாணம் பண்ணப் போறவங்கதான் அப்படிச் சொல்லுவாங்க. நம்ம அப்படிச் சொல்லக் கூடாது” என்றார்கள். “அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நமக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளைப் பிடித்திருந்தால்கூட ‘ஐ லவ் திஸ’ என்று சொல்லலாம். எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும் அதனாலதான் நான் சொன்னேன். உங்க மேல எனக்கு அவ்வளவு அன்பு” என்றேன். என் குழந்தைகள் நான்கு வயதிலும் ஆறு வயதிலும் புரிந்து கொண்ட அதீத கற்பனையின் பிம்பத்தை நான் என்னுடைய உயர்நிலை வகுப்பில் தெரிந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

வினைச்சொல்லான பெயர்ச்சொல் : கூகுள்

அரை விநாடிக்குள் நாம் தேடும் பதிலைத் தர 200க்கும் மேற்பட்ட கேள்விகள் மூலம் தரம்பார்த்து மதிப்பெண் வழங்கும் வேலை நடக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆண்கள் நலம்’ என்ற வார்த்தைகளைத் தேடினால் ஆண்கள் உடல் நலம் பற்றிய கட்டுரைகள், மன நலம் பற்றிய கட்டுரைகள், இந்த வார்த்தைகள் உள்ள செய்திகள், கதைகள் எல்லாம் தேடுபதிலில் வரும். இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகள் ஹைப்பர் லிங்காக இருக்கிறதா? எத்தனை முறை இருக்கிறது? தலைப்பில் இருக்கிறதா? யூஆர்எல்-ல் இருக்கிறதா? உள்ளே இருக்கும் பத்தியில் இருக்கிறதா? பேஜ் ரேங்க் என்ன? உள்ளே நுழைபவர்கள் ஸ்க்ரால் செய்து படித்துப் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ள தரமான பக்கமா, பயனர் உள்ளே நுழைந்ததும் மூடிவிடும் டுபாக்கூர் பக்கமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து ஹர்ஸ்டோரிஸ் தளத்துக்கு அதிக மதிப்பெண் கொடுத்து முதலில் காண்பிப்பது என்பதை முடிவு செய்கிறது.

மூட வேண்டியது மூடர் வாயை மட்டுமே...

பெண்கள் அழுக்கு உடையுடன் இருப்பதற்கான காரணம் நாள் முழுவதும் அவர்களை ஓய்வின்றி வைத்திருக்கும் வீட்டுவேலைகளே அன்றி வேரில்லை. நைட்டி என்றில்லை, வேலை செய்யும்போது உடுத்தும் புடவையும்கூட இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து உபயோகித்தால் பிசுக்கு பிடித்துப் போகும். வெங்காயம் நறுக்கினால் போதுமே, அந்த உடையை மாற்றும் வரை அதன் வாடை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்காதா?

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!” -2

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் – 3

சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

பெண்களும் நகைச்சுவையும்

இங்கே சினிமா துறையில் மனோரமா, கோவை சரளா என்று குறிப்பிட்டுச் சொல்ல இரண்டே இரண்டு பெண்கள்தாம் நகைச்சுவை நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது இவர்கள் தியரிக்குக் காரணமாக இருக்கலாம்.

அப்படிப் பார்த்தாலும் அது பெண்களின் தவறில்லை. ஆணாதிக்கம் நிறைந்த நம் சினிமா நாயகர்களைச் சார்ந்தே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்தே நகைச்சுவைக் காட்சிகளும் எழுதப்படுகின்றன

தனிக்குடித்தனம்

நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.