UNLEASH THE UNTOLD

Month: March 2023

பிரசவத்துடன் முடிந்துவிடுவதில்லை...

குழந்தை பெற்ற பெண்களுக்குப் போதிய ஓய்வு தேவை என்பதை குடும்பத்தினரும், உறவினர்களும் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையைப் பார்க்கச் செல்கிறேன் என நேரங்காலம் தெரியாமல் சென்று உறங்கும் தாயையும் குழந்தையையும் எழுப்பிவிடுவதைத் துளிக்கூட லஜ்ஜையின்றி செய்வதைத் தவிருங்கள். அதேபோல அவள் உடல் நிலை, மனநிலை பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், குழந்தைக்குப் பேர் வைக்கிறோம், தீட்டு கழிக்க ஹோமம் பண்ணுகிறோம் என டார்ச்சர் செய்யாமல் இருப்பது அந்தப் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் கூடுதல் உதவி.

<strong>தமிழ்நாட்டில் பண்பாட்டுப் படையெடுப்பு யாரால் நடந்தது?</strong>

பிராமணர்கள் சமுதாயத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் பண்பாடுதான் மேன்மையானது என்று பொதுப்புத்தியில் கருத்தப்படுகிறது. இந்தப் பொதுப்புத்தி சிந்தனை, பெரும்பான்மை பூர்வகுடிகளைத் தங்கள் சொந்தப் பண்பாட்டுக் கூறுகளை விடுத்து, கல்யாண சடங்குகள் முதல் கருமாதி சடங்குகள் வரை பிராமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்ளச் செய்தது. இந்த எதிர்மறையான பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தவும் முழு முதல் காரணம், அதிகாரம்.

டீக்கடை அரட்டையும் டிவி அரட்டையும்

“அதை ஏன் கேட்குறீங்க? டீமில் புதுசா ஒரு பையனை வேலைக்கு எடுத்தேன். அதுலேருந்து பெரிய தொல்லை. வீட்ல மாமியாருக்கு உடம்பு சரியில்ல, புள்ளை ஸ்கூலுக்குப் போகணும்னு அடிக்கடி லீவு, லேட்டு. இதுல அவ சிரிக்கிறா, கேலி பண்றான்னு யார் மேலயாச்சும் புகார் வேற. இன்னிக்கு என்னடான்னா சாப்டாம வேலைக்கு வந்துருப்பான் போல, மயங்கியே விழுந்துட்டான். ஆனா ஒண்ணு, வேலைல அக்கறை இருக்கோ இல்லியோ, சும்மா பொழுதைப் போக்கணும்னு வந்துடுறாங்க. சே இனிமே டீம்ல பையனுங்களையே வேலைக்கு எடுக்கக் கூடாது!”

"நம் வீடு பற்றி எரிகிறது..."

உலக அளவில் இளைஞர்களிடையே காலநிலை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் க்ரெட்டாவின் பங்கு முக்கியமானது. அவரது செயல்பாடுகளால் உந்தப்பட்டு 150 நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் காலநிலை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். க்ரெட்டாவைப் பார்த்து ஊக்கம் பெற்று இவ்வாறு இளைஞர்கள் களத்தில் இறங்குவது ‘Greta Effect’ என்று அழைக்கப்படுகிறது. சமகால சூழல் வரலாற்றில் க்ரெட்டா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு மிகவும் முக்கியமானது, அவசியமானதும்கூட.

மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் அசத்தும் ஹன்ஸா பெண்கள்!

நீண்ட ஆயுளும் அழகும் மட்டுமே ஹன்சாக்களின் பண்புகள் அல்ல. அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மதிப்பது போல் தங்கள் மன ஆரோக்கியத்தையும் மதிக்கின்றனர். குறைந்தபட்சம் 95 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். லட்சக்கணக்கில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படும் ஒரு நாட்டில், எல்லோருக்கும் கல்வியை வழங்கும் ஹன்சா பள்ளத்தாக்கை, ‘கல்வியின் சோலை’ என்று அழைப்பதில் எந்த ஐயமும் இல்லை.

காடுகளுக்குள் மறைந்த பொலன்னறுவை ராஜ்ஜியம்

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்ட ராஜராஜ சோழன், அதுவரை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்கு தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவையை முதன்முதலில் தலைநகரமாகத் தேர்வு செய்தான். 1017 இல் ராஜேந்திரச் சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து, இலங்கை முழுவதையும் சோழப் பேரரசின்கீழ் கொண்டுவந்தபோதும், பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி செய்திருக்கிறான். இப்படியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகராக, ‘பொலன்னறுவை ராஜ்ஜியமாக’ கோலோச்சியிருக்கிறது இந்தப் பகுதி.