UNLEASH THE UNTOLD

Month: March 2023

காலநிலை மாற்றமும் பெண்களும்

ஓர் இடத்தின் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்படும்போது, அங்கு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகவோ பிழைப்பு தேடியோ வேறு இடத்துக்குச் செல்வார்கள். இது காலநிலை புலம்பெயர்வு (Climate Migration) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு இடம்பெயரும் பெண்கள் புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்னொருபுறம், விவசாயமோ இயற்கை சார்ந்த தொழிலோ காலநிலை மாற்றம் காரணமாகப் பொய்த்துப்போய்விட்டால், ஆண்கள் மட்டுமே பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் செல்வதும் நடக்கிறது.

<strong>இஸ்ரேலின் நெகேவ் பெடோயின் பெண்கள்</strong>

மீள்குடியேற்ற காலம் 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை பெடோயின் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததிலிருந்து பெடோயின் சமூகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பாலினங்களுக்கிடையேயான இடைவெளி, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல்களின் தோற்றம் இதில் அடங்கும். நாடோடி காலத்தில் வளர்ந்த மூத்த பெண்கள் தங்கள் பாரம்பரியப் பாத்திரங்களை இழந்தனர்.

வெண்ணான்சியா எனும் தேவதை

ஓங்கும் கைகளைத் தாக்கும் முன்பு தடுக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பெண் என்பவள் நெருப்பு போல் வாழ வேண்டும் என்று புரிய வைத்தார். தலை குனிந்து நடந்த எங்களைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்தார்.

பாதி கடித்த ருசி மிகுந்த பீச் பழம்

பழங்கால சீனாவின் பேரரசராக இருந்தவரின் காதலன் மிஜி ஸியா, ஒருநாள் அரசருடன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த போது, கனிந்து சாறு கொட்டும் ஒரு பீச் பழத்தைப் பாதி கடித்து சுவைத்து அதன் ருசியில் மயங்கியவன், மீதியை அரசருக்கு அளித்தான். அவர் அதை வாங்கிச் சுவைத்துக் கொண்டே தன் மீது அவன் கொண்டிருக்கும் அலாதியான காதலை ரசித்து உருகினார்.

மாபெரும் விஞ்ஞானி ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்

ரோசலிண்ட் எடுத்த எக்ஸ்ரே படத்தை வாட்சன், கிரிக்கிடம் ரோசாலிண்ட்டின் அனுமதியின்றி வில்கின்ஸ் காட்டினார். வாட்சன், கிரிக் ஏற்கெனவே டிஎன்ஏ அமைப்பைக் கண்டுபிடிக்கவும் அது குறித்த தகவல்களை அறியவும் செய்து வந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக்கியது ரோசாலிண்ட்டின் இந்தப் படம். இந்தப் படத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சிகள் செய்து, டிஎன்ஏ வடிவம் இப்படி இருக்கலாம் என ஒரு கோட்பாட்டை நிறுவினர் இருவரும்.

அபார்ஷன்

காப்பான கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பெண்ணின் முன்னேற்றத்தில் ஒரு பெரிய மைல் கல் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை என்றாலும், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை, கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போட மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆணுக்கு மிக எளிதானது. ஆனால், பெரும்பாலும் பெண்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எந்தத் தொந்தரவும் தராத ஒரு தரமான ஆணுறை கரு உருவாவதைத் தடுக்க போதும் என்றாலும், பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும் காப்பர் டி, பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் ஹார்மோன் மாத்திரைகள்தாம் இன்றளவும் பல பெண்களின் கர்ப்பத் தடை சாதனமாக இருந்து வருகிறது.

கார்டுக்கு கார்டியன்

“ஜட்டி எல்லாம் பழசாயிடுச்சு நிலா. புதுசு வாங்கணும்.”

“ம்ம்… அப்டியா? சரி உன் சைஸ் எனக்குத் தெரியும், நானே வாங்கிட்டு வரேன்.”

“இல்ல நிலா, நானே பார்த்துப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கிறேனே… என் ஏடிஎம் கார்டைக் குடேன்” என்று லேசாகப் பொறுமையிழந்தான் வருண்.

“ஓ… அந்தளவுக்கு வந்துட்டியா? உனக்கு விவரம் பத்தாது. கன்னாபின்னான்னு செலவு பண்ணாதேன்னு சொல்லி நீயும் சரின்னு ஒத்துகிட்டப்புறம்தானே கார்டை நான் வாங்கி வெச்சிருக்கேன்.”

“நான் உன் கார்டைக் கேட்கல நிலா. என்னோடதைத்தான் கேட்கறேன்.”

“உன் பணத்தை நான் பதுக்கி வெச்சிருக்கேன்னு சொல்றியா?”

“ஐயோ… அப்டி இல்ல, உன் கிட்ட ஒவ்வொண்ணுக்கும் கேட்டுக்கிட்டு இருந்தா உனக்கும் தொந்தரவா இருக்குல்ல…”

“ஆஹா, என்ன இவ்ளோ சாமர்த்தியமா பேசுற? உங்க அப்பா சொல்லிக் குடுத்தாரா?” நிலாவின் குரல் அபாயகரமாக உயர்ந்தது.

விக்கியைத் தெரியுமா?

உலகம் முழுவதும் அடிப்படைத் தகவல்களை நாடுவோர் முதலில் செல்வது விக்கிபீடியாவுக்குத்தான். அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் விக்கிபீடியா இருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட மொழிகளில் பல நாடுகளில் இத்தளம் செயல்படுகிறது. பத்துக் கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பங்களிப்பைச் செலுத்தும் தன்னார்வலராக மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு கோடியை நெருங்குகிறது. ஆங்கிலத்தில் மட்டும் அறுபத்தேழு லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தளவில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் இருக்கும் தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

மாதவிடாய்ப் பொருட்களின் சூழலியல் அம்சங்கள்

அந்தக் காலத்தில் குப்பி அல்லது டேம்பான் போன்ற பொருட்களால் பெண்களின் கன்னித்தன்மை போய்விடும் என்ற பயமும் இருந்தது. இன்னொருபுறம், இந்த மாதவிடாய்க் குப்பிகளை ஒரு முறை வாங்கிவிட்டால், அவற்றைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், குப்பிகளை விற்பனை செய்த பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஆகவே தொடர் லாபம் தராத மாதவிடாய்க் குப்பிகளை உற்பத்தி செய்ய நிறுவனங்களும் முன்வரவில்லை. மாதவிடாய் சார்ந்த முதலாளித்துவம் (Period Capitalism) என்ற இந்த அம்சமும் நாப்கின்களின் புகழுக்கு ஒரு முக்கியக் காரணம்.

<strong>மகளிர் தினம் – மகளிரின் விருப்பம்</strong>

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.