UNLEASH THE UNTOLD

Month: September 2022

கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவையில்லை!

‘கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை. குழந்தைப் பேறு பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டிலும் அழுத்தம் கொடுக்கும் செயல். திருமணம் போன்று வாழ்க்கையை மாற்றிப் போடும் செயல். அதனால் கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை’ என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

பாலினம் என்பது ஒரு நிறமாலை

நமது சமூகத்தில் பெண்களை உற்றுப் பார்ப்பதையும் பெண்வடிவில் உள்ள திருநங்கைகளை உற்றுப் பார்ப்பதையும் அசாத்தியமாகச் செய்பவர்கள், திருநம்பிகளை மட்டும் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதில்லை எனக் கவனித்திருக்கிறீர்களா?

பெண்களுக்கு நீண்ட முடிதான் அடையாளமா?

“நீங்க சொல்றபடி சாதித்த, சாதிக்க நினைக்கும் பெண்கள் முடியை நீட்டி முழக்கி அழகுன்னு பராமரிக்கறதில்லைதான். தங்களை வளர்த்துக்க எத்தனிக்கும்போது இதெல்லாம் கணக்கிலேயே வைக்க முடியாது. இதைக் கணக்கில் வைத்தால் அவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படும். நேரம் ஒதுக்க முடியாம போய்டும். நான் சொல்றது சரிதானே மேடம்?” என்றாள் பொன்னி.

எல்லாம் பய மயம்!

மார்கஸ் அரேலியஸ் சொல்வார், ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லையா, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்கிற முதல் நிலை எண்ணத்தில் மட்டும் மனதை நிற்கச் செய்ய வேண்டும்; இப்படியே நலக்குறைவு அதிகமாகி, குழந்தை இறந்துவிடுமோ என எண்ணங்களின் அடுத்த நிலைக்குப் போகக் கூடாது. இது தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்யும். நிகழ்வதின் உள்ளபடியேயான தன்மையை உணரச் செய்யும். வேண்டாத, விபரீத கற்பனைகளைக் கட்டுப்படுத்தும்.’

பாறையாக மாறிய தேவதையின் மனம்

அவர்களின் நட்பைத் தவறாகத் திரித்து அனைவரும் பேச, ஒரு நாள் அவன் எல்லை மீறினான். பார்பவர்களின் நெஞ்சம் பதைக்க, ஒரு கண்ணில் ரத்தமும் மறு கண்ணில் கண்ணீருமாக அலறிக்கொண்டே, தரைத்தளம் நோக்கி ஓடினாள். அவளை வழிமறித்து மீண்டும் அடித்தான். மயங்கிய அவளை மீட்டு மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நலம் தேறினாள். மீண்டும் பழைய வாழ்க்கை.

உங்களின் முதன்மையான உறவு எந்த உறவு?

உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.

சமத்துவ மலை!

இலங்கையின் இரண்டாவது பெரிய, அழகு மிகுந்த சோலைகள் சூழ்ந்த அந்த மலை ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில், நிர்வாக ரீதியாக நுவரெலியா மாவட்டத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் உலகின் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

உறவுகளில் மகிழ்ச்சியைப் பெற...

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

செவிலித்தாய்கள்

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?           

தேவியின் மூர்த்தி

“அடேய் காலிப்பயலே… அந்த சின்னப்புள்ளய என்னடா பண்ண??”
“அம்மாடி.. அழாத… சொல்லு. உன்னை என்ன செஞ்சான் இவன்? பயப்படாம சொல்லுடா…”, என்றார் தலைமை ஆசிரியர்.