UNLEASH THE UNTOLD

Month: August 2022

குழந்தைகளிடம் பொறுப்புகளை வழங்கலாமா?

நிகழ்ச்சிக்குப் பொறுப்பு ஆசிரியர்களான சுதாவும் கலியமூர்த்தியும் குழந்தைகளை ஒரு வகுப்பில் நிகழ்ச்சி சார்ந்து சில விஷயங்கள் கலந்து பேச ஒருங்கே அமர வைத்திருந்தனர். ஆசிரியர் கூட்டத்தில் பேசிய விஷயங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

பெண்விடுதலை - குடும்பங்களில் ஆண்கள் பங்கு

இங்கு உண்மையாக, நேர்மையாக, திருமண வாழ்வில் ஈடுபாட்டுடன் வாழ்கிற ஆண்கள், பாதுகாப்பு உணர்வுடன், பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மையே என உணர்ந்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயமரியாதையுடன் கொண்டாடுவோம்!

வேலைக்குச் சென்று சாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து சாதனையாளர்களை உருவாக்கினாலும் சரி, இன்று பெண்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஓங்கும் கைகளைத் தடுக்கும் சக்தி பெண்களுக்கு வேண்டும். தன்னுடைய தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லும் தின்மை வேண்டும்.

அருணாவும் சுதந்திரப் போராட்டமும்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

பெண்ணுக்கான சுதந்திரம் எப்போது?

பெண்களுக்கான இடம் இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத இடத்தில் உள்ளோம். இன்று சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்து விட்டதைப் போல ஒரு பாவனை தோன்றும். ஆனால், நமது மக்கள் தொகையில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறித்துப் பார்க்கும் போது பெண்களுடைய வளர்ச்சி எங்கு உள்ளது?

போகும் பாதை தூரமே...

ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வடசென்னை காவியம்: பூக்காரர் குள்ளக்கா

அது என்ன பூ விற்கும் பெண்கள் குள்ளமாகத்தான் இருப்பார்களா? இல்லை, சற்றுக் குள்ளமாக உள்ள பெண்கள் பூக்காரர்களாக மாறிவிடுவார்களோ! அதுவும் நம் பூக்காரர் குள்ளக்கா என்ற அமுல்ராணி குள்ளத்திலும் குள்ளம்.

அப்பா பெயர் ஏன் விருப்பத் தேர்வில் இல்லை?

அப்பா இறந்துவிட்டார் என்றால் பாவ மடல் வாசிக்கிறவர்கள்கூட, அப்பா உயிரோடுதாம் இருக்கிறார், விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னதும் பார்த்தாலே ‘தீட்டு’ என்பதுபோல் பார்ப்பார்கள். நாம் எப்போதுமே அவர்களுக்கு suspected people தான்.

உணர்வுகள் வெங்காயம் போன்றவை...

உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.