UNLEASH THE UNTOLD

Tag: travel

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…

தமிழ் வேர்களைத்தேடிச் சென்ற பயணம்

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை. ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக…

பயணங்கள் இனிது

மற்றும் ஒரு பள்ளி விடுமுறைக் காலம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் தேக்கி வைத்த பயணக் கனவுகளைப் பலர் நிறைவேற்றியிருப்போம். சிலர் இன்னும் புதிதாய் திட்டங்கள் சேர்த்து வைத்து அடுத்த விடுமுறைக்குக் காத்திருப்போம். எங்கள் சுற்றுலாக்…

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.

பயம் ஒரு தடையல்ல...

மலைக்கோட்டை உச்சியில் பழங்காலப் புழக்கத்தில் இல்லாத பராமரிப்பு அற்ற கோயில், துணை மண்டபங்களும் இருந்தன. ஆங்காங்கே குடும்பமாகத் தோழர்கள் குழுக்களாக நின்றும் அமர்ந்தும் இயற்கையை ரசித்துக்கொண்டும் இளசுகள் ஓரத்தில் நின்று திண்டுக்கல் நகரத்தைப் பார்த்துக் கொண்டும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

நமக்கான நினைவுகளை உருவாக்குவோம்!

வாழ்வில் திரும்பிப் பார்த்தால் எனக்கான நாட்கள் சில இருக்க வேண்டும். என்னுடைய தோழியும் நானும் எங்களுக்கான தனியான நினைவுகளை உருவாக்க ஆரம்பித்து விட்டோம். எங்களால் வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல முடியாமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் புதிய இடங்களுக்குச் செல்ல முடியும்.

போர்களின் தேசம்

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

நள்ளிரவிலும் பெண்கள் ஊர் சுற்றலாம்!

ஆண்களும் பெண்களும் பகல் முழுக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். மாலையானதும் ஹோ சி மின் நகரின் முகம் மாறுகிறது. வீட்டுக்குள் யாரும் அடைந்து கிடப்பதில்லை. அத்தனை வீடுகளிலும் வாசலில் சின்ன சின்ன நாற்காலிகளில், வீட்டு மனிதர்களைக் காண முடிகிறது. யாரும் தொலைக்காட்சித் தொடர்களில் தங்களைத் தொலைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சாலையிலும் குறிப்பிட்ட பகுதி பொழுதுபோக்கு/விளையாட்டு மைதானமாக விடப்பட்டுள்ளது. இரவு ஆனதும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் அங்கு திரள்கிறார்கள். கயிறு விளையாட்டு, நடனம், ஓவியர்கள், ஓவியங்கள், பலூன்கள், ஸ்கேட்டிங், உடல்முழுக்க பெயின்ட் அடித்துக்கொண்ட மனிதர்கள் என அந்தப் பகுதி களைகட்டுகிறது. இளைஞர்களை, இளைஞிகளைத் திருவிழா கூட்டம்போல, கும்பல் கும்பலாகப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் ஆங்காங்கே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, சுற்றியிருக்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.