UNLEASH THE UNTOLD

Tag: Tamil

நஞ்சை விதைக்கும் நாயகர்கள்

வெற்றிபெற்ற தொழில் அதிபராக இருக்கும் நாயகியின் திமிரை நாயகன் அடக்குவதும், தன்னை மணம் புரியக்கேட்கும் பெண்ணை அவமதிப்பதும், ஆனால், தான் இன்னொரு பெண்ணை ஸ்டாக்கிங் செய்வதைப் புனிதப்படுத்துவதும், வேலை எதுவுமின்றி அலைந்தாலும் தான் ஆண் என்பதால் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதை காதல் என்று வகைப்படுத்துவதும் காலம்காலமாக சினிமாவில் இயல்பாக்கப்பட்ட விஷயங்கள்.

இதய கீதம்

நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில்  அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

"குழந்தைகள் நிறைய வாசிக்கணும்!” - எழுத்தாளர் தேவி நாச்சியப்பன்

1983இல் ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் என் முதல் மொழிபெயர்ப்புக் கதை வெளியானது. தொடர்ந்து எனது மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுவர் இதழ்களில் வெளிவந்தன; மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரிக் காலங்களில், புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், தந்தையின் சொற்படி மரபுக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தந்தையாரின் வழிகாட்டுதலின்படி குழந்தை எழுத்தாளரானேன்.

மந்திரி குமாரி

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். உலக வரலாறு பற்றிய அவருடைய பொது அறிவும் வியப்பை அளிக்கும் வண்ணம் இருந்தது.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

குமுதினி (1905 – 1986)

மகாத்மா காந்தியிடம்  மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு  மணித்திரள்  எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.