கறை படிந்த கறுப்பு ஜூலை
இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது.