UNLEASH THE UNTOLD

Tag: science

கருமுட்டை சேமிப்பு

பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி, இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்து, பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு நிலையை அடைந்ததும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சேமித்து வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப்…

தவறிப் போதல்... 

முதலில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள். ஒரு மனிதனின் உடலில் பாலினம் சார்ந்த செல்கள் அதாவது ஆணுக்கு விந்தணு, பெண்ணுக்குக் கருமுட்டை இவற்றைத் தவிர மீதி எல்லா செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்தப் பாலினம் சார்ந்த செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டும்தான் இருக்கும். 46 குரோமோசோம்களிலிருந்து 23 குரோமோசோம்களாகக் குறையும் இந்த நிகழ்வை ஒடுக்கற்பிரிவு (meiosis) என்று அழைப்பர். இது பாலினம் சார்ந்த செல்களில் (gonad cells) மட்டும்தான் நடக்கும்.

புரியாத புதிர்கள் 

குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்‌

"பெண்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாது..."

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.

பணியிடம் எனும் பெருவெளி

ஸ்டெம் துறைகளில் இருக்கும் ஊதிய இடைவெளி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2021இல் வெளியான ஸ்டான்ஃபோர்ட் பிசினஸ் அறிக்கையில், தொடக்கநிலையிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுவாக ஸ்டெம் துறைகளில் பெண்களைவிட ஆண்களுக்கான ஊதியம் 40% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

குழந்தை யார் சாயல்?

தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் வீரர்களான போலார்டும், க்ரிஸ் கெயிலும் நம் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு காரணம் அவர்களின் தோற்றம். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உயரமாகவும், தங்கள் உயரத்திற்கேற்ற எடை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது தாயனையும் அது தாங்கி நிற்கும் மரபணுக்களும். ஜப்பானியர்களின் உயரமும் ஐரோப்பியர்களின் நிறமும் நேபாளியர்களின் தோற்றமும் சீனர்களின் கண்களும் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டவைதான்.

குட்டிப் பெண்களின் சாதனை

ஆராய்ச்சிக் கூடங்களின் எலிகள் போல குழந்தைகளுக்குப் புரியாதவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வைப்பதை சாதனை எனச் சொல்லமுடியுமா என்ன?

கடுஞ்சூல் மகளிர்!

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!

கடற்கன்னிகளின் மணிபர்ஸ்!

கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும்.