இதுதான் காதல் என்பதா!
அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவள் இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.
கடல் அரிப்பைத் தடுக்க போட்டிருந்த கற்பாறை மேல் அமர்ந்தாள். அருகிலிருந்த பாறை மேல் அவனும் அமர்ந்தான்.
கடல் அவனைப் போல் ஓய்வின்றி பேசியது, எதையும் பேசாமல் அதை அமைதியாகக் கேட்டு கொண்டு இருக்கும் கரையாக அவள்.
