தீர்ப்பு வழங்க நாம் யார்?
நாம் மற்றவரைப் பற்றிய பரிவோடு நடந்து கொள்ளாமல் இருக்கும் போது, அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனம் புண்படும். மனம் அமைதி இன்றி தவிக்கும். குறைந்தபட்சம் நம் மன அமைதிக்காகவாவது மற்றவரிடம் பரிவுடன் இருப்போமே?
நாம் மற்றவரைப் பற்றிய பரிவோடு நடந்து கொள்ளாமல் இருக்கும் போது, அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனம் புண்படும். மனம் அமைதி இன்றி தவிக்கும். குறைந்தபட்சம் நம் மன அமைதிக்காகவாவது மற்றவரிடம் பரிவுடன் இருப்போமே?
ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும், இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம், ஏன் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுடன் எழுபவருக்கு, எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவும் இருக்கும்.
சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.
நாம் கனவு காணும் சமமான சமுதாயத்தில் இது இல்லாமல் போகும். சிக்கலான மனம் இரு பாலருக்கும் ஒன்றுதான். மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் “அது போன வாரம், இது இந்த வாரம்.“
பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.
எந்த உணர்வும் அது மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் எதுவாகினும் அதன் அளவு கூடும்போது அது நமது நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்போது நாம் அதை வெளிப்படுத்தும் வழி பின்னாளில் நம்மை வருந்த வைக்கலாம் அல்லது மாற்ற முடியாத இழப்பை உண்டு பண்ணலாம். அந்தந்த நேரத்து உணர்வைச் சரியாகக் கையாள்வதின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.
மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”
நம் மகிழ்ச்சி, துன்பம், வளர்ச்சி, வாழ்க்கை தரம் அனைத்தையும் முடிவு செய்வது நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல, அதை ஒட்டிய நமது உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான நமது செயல்களும்தாம். நிகழ்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கில்லை, அதனை ஒட்டிய உணர்வைக் கையாளும் ஆற்றல் நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது.
ஏனென்றால் மனிதர்களுக்குக் காதலிப்பது, காதலிக்கப்படுவது, அன்யோன்யமான உறவில் இருப்பது, இளமையிலும் முதுமையிலும் எல்லாப் பருவ வயதுகளிலும் பிடித்தே இருக்கிறது. ஆக இந்த அடிப்படையான உயிரியல் தூண்டுதலும் அன்யோன்யத்தின் மீதான ஆசையும் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் நம் மூளை சொல்லும் வேண்டாம் என்ற தீர்வுக்கும் இடையே எழும் குழப்பம்தான்.
என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!