UNLEASH THE UNTOLD

Tag: kalpana

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்களைப் பாதுகாக்கத்தான் ஆண் படைக்கப்பட்டானா?

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.

‘எல்லாரும் சமம்தானே டீச்சர்?’

கல்வி வளாகங்களில் சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் வழி அவர்களது குடும்பங்களுக்கும் சமத்துவம் கடத்தப்பட வேண்டும். அத்தகைய கற்றல்முறை ஏற்பட வேண்டும். “எல்லாரும் சமம்தானே டீச்சர்” என்று கேட்கும் மாணவனைப் போன்று சிந்திக்கும் திறன்கொண்ட, கேள்வி கேட்கும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே கல்வி வளாகங்களின் நோக்கமாக வேண்டும்.

உலகத் தாய்ப்பால் வாரமும் உள்ளூர் அலப்பறைகளும்

குழந்தை பராமரிப்பில் தந்தை பங்கெடுக்கிறபோது குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும். தேவைகள்தாம் இங்கு உறவுகளை உருவாக்குகின்றன; குழந்தையின் பசித் தேவையைப் போக்கும் தாயை, குழந்தை தன்னுடைய உறவாக நம்புகிறது. அழுதல், சிணுங்கல், சிறுநீர் கழித்தல் போன்ற எதைச் செய்தாலும் உடனே வந்து நிற்கும் தாயை மட்டுமே அதிகமா உள்வாங்கும் குழந்தை எதற்கெடுத்தாலும் தாய்தான் தனக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கப் பழகிவிடுகிறது.

பேய் என்னும் கட்டுக்கதையை அழித்தொழிப்பது எப்படி?

மனநல மருத்துவர்கள் ‘பெண்ணொடுக்கம்’ என்ற பாரம்பரிய மரபிலிருந்து வெளியேறி, ‘பாலின சமத்துவம்’ என்ற அறிவியல் பாதையில் பகுத்தறிந்து பயணித்து மக்களின் உளவியல் நலத்தைப் பேண வழிவகை செய்ய வேண்டும்.

பெண்கள் பேய்களைப் பிடித்துக்கொண்ட கதை

அமைதி, மென்மை, கற்பு என்றெல்லாம் அடக்கியாளப்பட்ட பெண்கள் பேய் பிடித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுதலையடைகின்றனர். அதுவரையிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருந்த கோபங்களையும் கொண்டாட்டங்களையும் ஆற்றலையும் பேயினூடனாக வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.

பெண்கள் பேய்களான கதை

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

கருப்பையும் கரு உருவாக்கமும்

குடும்ப உறவுகளின் அழுத்தத்தாலோ கணவனின் வன்முறையான புணர்வுகளாலோ காமத்தின் முழுமையை உணராத பெண்களின் கருப்பையில் உருவாகும் சிசுக்கள் வளர்ச்சியடைகிற பொழுதும் எதிர்மறை அழுத்தங்களுக்குள் ஆட்பட வாய்ப்புண்டு.

பெண்மையும் கருப்பையும்

பெண்மை என்ற பாலினம் பலவீனமானதல்ல. பலவீனமானதாக ஆக்கப்பட்டுள்ளது. கருப்பை என்பது பெண்ணுடலில் இருக்கக்கூடிய தனித்துவமான உறுப்பு. கருப்பை மீதான அதிகாரம் அதை வைத்திருக்கக்கூடிய பெண்ணுக்கு மட்மே உரியது.