UNLEASH THE UNTOLD

Tag: india

வாசெக்டமியை ஏன் ஆண்கள் விரும்புவதில்லை?

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.

அபார்ஷன்

காப்பான கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பெண்ணின் முன்னேற்றத்தில் ஒரு பெரிய மைல் கல் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை என்றாலும், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை, கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போட மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆணுக்கு மிக எளிதானது. ஆனால், பெரும்பாலும் பெண்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எந்தத் தொந்தரவும் தராத ஒரு தரமான ஆணுறை கரு உருவாவதைத் தடுக்க போதும் என்றாலும், பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும் காப்பர் டி, பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் ஹார்மோன் மாத்திரைகள்தாம் இன்றளவும் பல பெண்களின் கர்ப்பத் தடை சாதனமாக இருந்து வருகிறது.

விக்கியைத் தெரியுமா?

உலகம் முழுவதும் அடிப்படைத் தகவல்களை நாடுவோர் முதலில் செல்வது விக்கிபீடியாவுக்குத்தான். அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் விக்கிபீடியா இருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட மொழிகளில் பல நாடுகளில் இத்தளம் செயல்படுகிறது. பத்துக் கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பங்களிப்பைச் செலுத்தும் தன்னார்வலராக மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு கோடியை நெருங்குகிறது. ஆங்கிலத்தில் மட்டும் அறுபத்தேழு லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தளவில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் இருக்கும் தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

<strong>மகளிர் தினம் – மகளிரின் விருப்பம்</strong>

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?

முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

<strong>நீர் ஜனநாயகம்</strong>

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!