UNLEASH THE UNTOLD

Tag: health

இனப்பெருக்க ஆரோக்கியம் அடிப்படை உரிமை

கர்ப்பக் காலப் பராமரிப்பு, ரத்தசோகையைத் தவிர்த்தல், ஆரோக்கிய உணவிற்கான அறிவுரைகள், பால்வினை நோய்களுக்கான சிகிச்சைகள், மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளித்தல், மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் பேணல், உடலுறவு குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கிய பாலியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்குதல் அவசியம் தேவை.

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு.

அச்சமூட்டுகிறதா மெனோபாஸ்?

மெனொபாஸ் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க சக்தியை முடித்துக்கொள்கிறது. ஓவரியன் தன் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறது.
இதெல்லாம் ஒரு நாளில், வாரத்தில், மாதத்தில் நடப்பதில்லை. இது பல கட்டங்களில் நடைபெறும். எப்படிச் சூரியன் உதிப்பதும் மறைவதும் சட்டென இன்றி படி நிலைகளில் இருக்கிறதோ அப்படித்தான்.

பெண்கள் பேய்களான கதை

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

பாக்கெட் உணவுப்பொருட்களில் குழந்தைகளை எச்சரிக்கும் வாசகங்கள் இடம்பெறுமா?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளுக்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சர்க்கரை மற்றும் கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளின்படி, அவை எந்த அளவிற்குக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்கள் பாக்கெட்டின் வெளியில் அச்சிடப்பட வேண்டும் என்ற விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், உணவு நிறுவனங்கள் சர்க்கரைக்கு உள்ள மாற்று பெயர்களான கார்ன் சிரப், பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ் என்று சாமர்த்தியமாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுவிடுகின்றன.