அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?
யோசித்து பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.
