வாடி ராசாத்தி... புதுசா, ரவுசா போவோம் வாலாட்டி...
ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
ஆண்களுக்குச் சமைக்க வராது என்றெல்லாம் இல்லை. சில ஆண்கள் வீட்டில் மனைவி சின்னச் சின்ன வேலைகள் சொன்னால் தப்புத்தப்பாகச் செய்து வைப்பார்கள். அப்படிக் காட்டிக் கொண்டு தப்பும் தவறுமாகச் செய்தால் மறுபடி சமைக்க அல்லது வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில் அவ்வாறு நடிக்கிறார்கள்.
தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது.
ஆண் தன் இயல்பை வெளிப்படுத்த இந்தச் சமூகத்தில் வாய்ப்பிருக்கு. பெண் தன் இயல்பைக் கட்டுப்படுத்திக்கிட்டு அடக்கமா வாழணும்னு சமூகமும் குடும்பமும் பெண் மேல திணிக்கிறது மூலமா ஆதிக்கத்தை நிலைநாட்டுது.
எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!
பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.