UNLEASH THE UNTOLD

Tag: Andha nalu per

அந்த நாலு பேருக்கு நன்றி

அந்த நாலு பேர் இல்லாத சமூகம் இல்லை. ஏனெனில் அந்த நாலு பேர் யாரோவும் அல்ல. நாம்கூட யாரோ ஒருவர் வாழ்வில் அந்த நாலு பேரில் ஒருவராக இருக்கலாம். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவும் நால்வரில் ஒருவராக இருப்போம். வலிகள் நிறைந்த ஒருவருக்கு அன்பும் ஆறுதலும் செலுத்தும் நால்வரில் ஒருவராக இருப்போம். ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் நால்வரில் ஒருவராக இருப்போம். நான்கு விதமாகச் சொல்லும் அந்த நாலு பேரில் நல்ல விதமாகச் சொல்லும் ஒருவராக நாம் இருக்க முயற்சிப்போம்.

எது தீட்டு?

அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.

அவளுக்கு வழிகாட்டிய அந்த நான்கு பெண்கள்

இவர்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்கிற வட்டத்துக்குள் தன்னைச் சிறையிடாமல் இருப்பது. சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று கடந்து வருவதுதான். தான் அறியாமலே பிறருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதில்லை, அவர்களின் பயணம் எளிதில்லை. ஆனால், அது அவள் போல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க உதவுகிறது.

காத்திருத்தல் நல்லதே!

அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.

இப்படியும் அப்படியும் பேசும் ஊர்வாய்கள்...

மேற்படிப்புக்குத் தயாராக மருத்துவமனையை மூடிய போது, அது திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதே வாய்கள்தாம், ஏன் வருமானம் வரும் மருத்துவமனையைப் பொறுப்பில்லாமல் மூடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டன.

பெண்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள்

‘நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டதுபோல், அவர்களும் தங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்’ என்று கூறினாள். அது உண்மைதான், ‘ஆனால் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையுடனும், அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள், அவர்களை நம் வீட்டுப் பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போமோ அதைப் போன்ற பாதுகாப்பான உணர்வுடன் வெளியுலகைக் காணும்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்’ என்கிற அவள் வார்த்தைகள் தனிப்பட்ட கருத்து என்பதைவிட, சமூகக் கடமையாக மாறினால் இந்த நிஜ வாழ்க்கை பூச்சாண்டிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கவிதை என்னும் காலநதி

அந்த ரகசியம் பிறருக்குத் தெரிய பல வருடங்கள் ஆனது. ஒரு காலகட்டத்தில் அவள் கண்முன் கண்ட அனைத்தையும் கவிதையாகக் கண்டாள். காலையின் முதல் கதிர் தொடங்கி இரவின் நட்சத்திரக் கூட்டம் வரை இயற்கையின்அனைத்து அதிசயங்களும் அவள் வார்த்தைகளின் தூரிகையில் அழகு கவிதைகளாகப் பிறந்தன.

பொண்ணு அவ அப்பா மாதிரி கறுப்பா இருக்கா...

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது.