UNLEASH THE UNTOLD

Tag: America

நேபாம் சிறுமியை மறக்க முடியுமா?

ஒரு வல்லரசு ஏகாதிபத்தியத்தை வெற்றிகொள்வதற்காக வியட்நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிக மிக அதிகம். பேராசைக்கான போர்களில் எப்போதும் அப்பாவி ஆடுகளே பலியாகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண்!

பதவிகளும் சொகுசான வாழ்க்கையும் வசதியும் தேடி வந்தாலும் விமானத்தில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற மாபெரும் வேட்கையைக் கொண்டவராக இருந்தார் அமெலியா. அவருக்கு முன் வேறு பலர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும் தனக்கென புதிய இலக்கொன்றை வைத்திருந்தார். தன் பயணத்துக்காகப் பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துக்கொண்ட பாதை, அதுவரை மற்றவர்கள் தேர்ந்தெடுத்த பாதையைவிட அதிக தூரத்தைக் கொண்டது. ஏறக்குறைய 47 ஆயிரம் கி.மீ. வான்வழிப் பயணம் செய்யவேண்டும். பர்டியூ பல்கலைக்கழகத்தின் பொருளுதவியுடன் அவருடைய பயன்பாடுக்கேற்ற வகையில் விமானத்தை வடிவமைத்தது லாக்ஹீட் வானூர்தி நிறுவனம்.

<strong>அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளர்</strong>

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.

நன்றி நவிலல் விழா

இன்று சமயச் சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், இது அடிப்படையில் இங்கிலாந்தில் சமய விழாவாக, அறுவடை நாளாகக் கொண்டாடப்பட்ட விழாவின் தொடர்ச்சியாகவே உள்ளது.

ஹாலோவீன்

வீட்டு வாசலில் பூசணிக்காயை அழகாக வெட்டி வடிவமைத்து உள்ளே விளக்கு / மெழுகுவர்த்தி வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் ஆரஞ்சு பூசணிக்காயின் உள்ளே இருந்து வரும் வெளிச்சம், தீப்பிழம்பு போல இருக்கும்.

மயக்கும் பெல்மான்ட்

வெளியூர் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே சொல்லி விட்டால், கட்டணம் இல்லாமல், ஒரு மாதம் வரை நமது அஞ்சல்களைத் தனியாக எடுத்து வைத்து, நாம் வந்த பின் தருவார்கள்.

த மோஸ்ட் ஹேட்டட் உமன் இன் அமெரிக்கா

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசு சார்ந்த பணிகளிலும் அலுவலகங்களில், நிறுவனங்களில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், அமெரிக்கா மதச்சார்ப்பற்ற நாடு.

தங்கம் செய்யாததைக்கூடச் சங்கம் செய்யும்!

க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?

மாபெரும் அமெரிக்கக் கனவு

ஆறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் பேராவலில், நம்மோட வாழ்க்கையை வாழாம தவறவிடும் நமக்கு, வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காமல் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைக்கிற அமெரிக்கர்களின் கலாச்சாரம் அதிசயமாகத்தான் இருக்கு