கருமுட்டை தூண்டும் இயக்குநீர் (Follicule stimulating Harmone) இதை FSH என்றே அழைப்போம். இது இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிக முக்கியமான ஒரு ஹார்மோன். இனப்பெருக்கம் நிற்கும் பொழுது இது பற்றியும் அறிந்துகொள்வது மிக முக்கியமில்லையா?
ஒரு பெண் பிறக்கும்போதே அவள் நிறைய ஃபாலிக்யூலருடன் பிறக்கிறாள். அதாவது கரு நுண் குமிழிகள் எனச் சொல்லலாம்.
இவை என்ன செய்யும்? ஈஸ்ட்ரோஜன், ப்ராகெஸ்டெரோன் இவற்றை உற்பத்தி செய்ய இந்த ஃபாலிகில் முக்கியப் பங்காற்றுகிறது. ஓவரியில் ஈஸ்ட்ரொஜன், ப்ராஜெரஸ்டோன் உற்பத்தியாக, பிட்யூட்டரி சுரப்பியில் உற்பத்தி ஆகும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் முக்கிய வினையாற்றுகிறது. அதனால் மாதவிடாயைச் சரி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தப் பரிசோதனை பெரும்பாலும் கர்ப்பம் ஆகாமல் இருப்பவர்களுக்குச் செய்வாரகள். மாதவிடாய் சரியில்லாவிடில் பார்ப்பார்கள். மெனோபாஸ், பெரி மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு நின்றால் செய்வார்கள். உடலுறவில் ஆர்வம் இல்லாவிடினும் இந்தப் பரிசோதனை செய்வார்கள். இது ஆணுக்கும் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
பசியின்மை, சோர்வு, உடல் இளைப்பு இருப்பினும் இதையும் கவனிப்பர். அளவுககு அதிகமாக இருப்பின் ஓவரியில் சிக்கல், மெனோபாஸ் PCOS போன்றவை இருக்கலாம்.
குறைவான கருமுட்டை தூண்டும் இயக்குநீர்
பெண் கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண் விந்து உருவாவதில் சிக்கல், பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோன் உற்பத்தியில் சிக்கல், மிக முக்கிய ஒன்று மனாழுத்தம். அதுபோல் இதன் துணையாக பிட்யூட்டரி சுரப்பியில் LH ஹார்மோன் உற்பத்தியாகிறது.
ஆன்ட்ரோஜன் உற்பத்திக்கும் ஈஸ்திரடையோல் (Estradiol) உற்பத்திக்கும் உதவுகிறது. ப்ரொஜஸ்ட்ரோன் உற்பத்தியில் வினையாற்றுகிறது. அதிகளவில் உற்பத்தி சிக்கல்களை உருவாக்கும்.
மேலே சொன்னவை செக்ஸ் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன.
பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் ஹார்மோன்களின் செயற்பாடு என்ன?
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சுரக்கும். strong fluctuations இருக்கும். அதாவது நார்மலில் இருந்து மிகக் குறைவு, மிக அதிகம் என் மாறிக்கொண்டே இருக்கும். அது கருமுட்டை தூண்டும் இயக்குநீருடன் இருக்கும் செயற்பாடுகள் மெனோபாஸ் நேரத்தில் மாற்றம்கொள்ளும்.
கருமுட்டை தூண்டும் இயக்குநீர் கரு முட்டை வளர்ச்சியைக் குறைக்கும். இதற்கெல்லாம் முன்பே மெனோபாஸ் ஓர் இடத்தில் ஆரம்பிக்கும். நாம் கர்ப்பப்பை, ஓவரியில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மெனோபாஸ் என நினைக்கிறோம் இல்லையா, உண்மையில் மெனோபாஸ் மூளையில்தான் ஆரம்பிக்கிறது.
ஆம், ஹைபோதெலமஸ், பிட்யூட்டரி சுரப்பிகள் எல்லாம் FSH, LH உற்பத்தியில் ஈடுப்பட்டு இருக்கும். அதாவது நம் செக்ஸ் ஹார்மோன்கள் முதலில் நம் மூளையில்தான் உற்பத்தி ஆகும். செக்ஸ் என்பது பாலியல் மட்டுமல்ல பாலினம் என்றும் இங்கு வரையறுக்கலாம்.
Gonadal hormone secretion. அதாவது இனப்பெருக்கம் மற்றும் பாலியலுக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தியாவதில் இவை பங்கு வகிக்கும்.
படிப்படியான மெனோபாஸ் காலத்தில் இந்தச் சுரப்பிகளில் முதலில் மாற்றம் ஆரம்பிக்கும். பின் கருமுட்டை உற்பத்தி செய்தல், சினைப் பிடித்தல் போன்ற வேலைகளில் மாற்றம் வரும். கரு நுண் குமிழிகள் முட்டையாக மாற்றும் வேலையைதான் ஓவரி மாதா மாதம் செய்யும். அதற்கான தூண்டுதல் செக்ஸ் ஹார்மோன்களில்தாம் கிடைக்கும். அவை குறைய ஆரம்பிக்கும். அவை மூளையில் இருக்கும் சுரப்புகளில் சுரந்து ரத்தத்தில் கலக்கும். எனவே மெனோபாஸ் மூளையில்தான் ஆரம்பிக்கிறது. ஒரே நாளில் இவை நிகழாமல் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும்.
FSh , LH மெனோபாஸுக்குப் பின் ஒரே அளவில் இருக்கின்றன. அதே நேரம் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் வித்தியாசப்படும். இன்ஹிபின் பி மற்றும் சில ஹார்மோன்களின் செயற்பாடுகள் ஓவரியன் வேலைகளை நிறுத்துவதில் ஈடுபடும். வயதுக்கு வரும் நேரத்தில் பெண்களுக்கு ஓவரியனைச் செயற்பட வைக்கும் ஹார்மோன் சுரப்புகள் ஆரம்பம் ஆகும்.
ஃபாலிகில்களில் உருவாகி இருக்கும் இல்லையா, அதைக் கருமுட்டையாக மாற்றும் சுழற்சி ஹார்மோன்களால் நடக்கும். அதுதான் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் (FSH) என்று சொல்லப்படுகிறது.
ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும் பொழுது இது குறையும். ஈஸ்ட்ரோஜன் மேல், கீழ் சுரப்புக்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இவை வேலை நிறுத்ததில் ஈடுபடுவதே மெனோபாஸ்.
Pause
மெனோபாஸுக்கு முன்பு அதிக உதிரப்போக்குச் சிலருக்கு ஏற்படும் காரணம், தன் செயற்பாட்டை இந்த ஹார்மோன்கள் நிறுத்தும்போது அதிக வேலை செய்வதும் காரணம்.
Water regulation system என்று ஒன்று இருக்கிறது. இதற்கும் மெனோபாஸுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. வயதாகும்போது நம் சிறுநீரகங்களுக்கும், கழிவுகளை வெளியேற்றும் அமைப்புகளுக்கும் வயதாகும். தன் வேலை பளுவைக் குறைக்க முற்படும். அப்போது இளவயது போல் நம் குருதி வெளியேற்றம் இருக்காது. அவை செயற்பாடுகளில் குறையும் போது சோடியம் அளவுகள் குறையும். அதைத் தவிர ஹார்மோன்கள் அளவுகளும் நீர்ம சமநிலையைப் பாதிக்கும். இந்த நீர்ம சமநிலை இதயம் முதல் பல விஷயங்களில் பாதிப்பை உருவாக்கும்.
இன்னும் ஈஸ்ட்ரோஜன், புராஜஸ்ட்ரோன் செயற்பாடுகள் எப்படி நம் நீர்ம நிலை, சோடியம் அளவுகளில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன எனக் கண்டறியும் முன் நம் உடல் நிலையில் என்ன மாற்றம் ஏற்படும் என்று பார்ப்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:
கிர்த்திகா தரன்
இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.