நம் உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு முன்பு பெண்கள் ஹார்மோன்கள் பற்றி பார்க்காம்.
ஈஸ்ட்ரோஜன்:
மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் என்ற வார்த்தை அதிகம் கேள்விப்படுவோம். முதலில் ஈஸ்ட்ரோஜன் என்றால் என்ன?
ஈஸ்ட்ரோஜன் என்பது ஒரு ஹார்மோன். பெண்களின் உடலில் பெண்மையைக் கொண்டு வரும் ஹார்மோன் என்றும் சொல்லலாம். இது செக்ஸ் ஹார்மோன் வகைப்பாட்டில் வரும் பெண்களின் இனபெருக்க உறுப்புகள் மற்றும் அதற்கான பாலியல் விஷயங்களுக்கும் இந்த ஹார்மோன் உதவுகிறது.
இதில் மூன்று வகைகள் இருக்கின்றனா.
1. E 1 Estrone
2. E 2 Estradiol
3. E 3 Estriol
4. E 4 Estretrol (இது கர்ப்பத்தில் சுரப்பது)
நாம் மெனோபாஸைக் கவனிப்பதால் E1 Estrone அதிகம் சுழற்சியில் ஏற்படும். அதே போஸ்ட் மெனோபாஸில் ஈஸ்ட்ரோன் முக்கிய ஈஸ்ட்ரோஜனாகச் சுரக்கும்.
Estradiol அதிகம் சுரந்தால் பாலியல் உணர்வு குறையும்..ஏன் மனச்சோர்வு வரக்கூட வாய்ப்பு உண்டு. அளவான ஈஸ்ட்ரோஜன் சுரப்பு நமக்கு அவசியம்.
ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஹார்மோன். அது இனப்பெருக்க வயதில் பெண்களுக்கு மிக அதிகமாகச் சுரக்கும். பெண்களின் மார்பு வளர்ச்சி, பருவம் அடைதல், பருவம் அடையும்போது உருவாகும் முடி, பெண் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
ஓவரி – ஓவரியில் முட்டை உற்பத்தியில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது.
கரு வாய் (Vagina): பெண்களுக்குக் கசியும் ஈரம் ஓர் உராய்வுத் தடுப்பாகச் செயல்படும். அதைத் தவிர கரு வாய் தடிமனைப் பாதுக்காக்கிறது.
கர்ப்பப்பை : கர்ப்பப்பை மூயூகோஸ் மெம்பரைன் பகுதியைப் பாதுகாக்கிறது அல்லது செயற்பட வைக்கிறது. அதைத் தவிர இன்னும் சில விஷயங்களில் பங்கேற்கும்
மார்பகப் பகுதி : மார்பக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. தாய்ப்பால் சுரந்து முடிக்கவும் உதவுகிறது.
ஈஸ்ட்ரோஜன் அளவுகள் ஒவ்வொருக்கும் மாறுபடும். இந்த அளவுகள் மாறுபாட்டால் மெனோபாஸில் சூடான ஃப்ளாஷ் உருவாகும். மூட் ஸ்விங்ஸ் உருவாகவும் இந்த ஹார்மோன் தான் காரணம். ஈஸ்ட்ரோஜனின் ரெட்டை வேஷம் களைவது மெனோபாஸில்தான்.
Estrogen அளவுகள் எங்கெல்லாம் பாதிக்கப்படும்?
கர்ப்பம், பாலூட்டல் முடிவடைதல், வயதுக்கு வருதல், வயது உடல் பருமன், டயட் நோய்கள் (அனொரக்சியா), அளவுக்கு அதிக உடற்பயிற்சி மருந்துகள், முக்கியமாக ஸ்ட்ராய்ட் இன்னும் பல.
சில நோய்கள்
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பி சி ஓ எஸ், ஓவரி கட்டிகள்
ஈஸ்ட்ரோஜன் சமமின்மை என்ன செய்யும்?
தாறு மாறு மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்று போதல். ரத்தப்போக்கு அதிகமாதல் அல்லது குறைதல்.
ஹாட் ஃப்ளஷ், இரவு வியர்த்தல் அல்லது இரண்டும். பாலியல் உணர்வு குறைதல், தூக்கம் தவறுதல், மூட் சிக்கல்கள், கர்ப்பவாய் வறட்சி, சோர்வு. மன அழுத்தம், கவலை சிலருக்கு, தோல் வறட்சி… இவற்றில் பல மெனோபாஸ் நேரத்தில் வரும். எல்லோருக்கும் வரும் என்பது அல்ல. வர வாய்ப்புண்டு.
அப்போ ஈஸ்ட்ரோஜன் தெரபி எடுக்கலாமா, என்ன செய்யலாம்?
இதற்கு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்
உணவுதான் இங்கு மிக முக்கியம். என்ன உணவுகள்?
பச்சைக் காய்கறிகள், பெர்ரிகள், விதைகள், பருப்புகள், பழங்கள், வைன்
மிக முக்கியமாக நான் கவனிப்பது ஃபைட்டோ கெமிக்கல்கள். அவற்றை நாம் டயட் பகுதியில் கவனிப்போம்.
Progrestone
ஈஸ்ட்ரோஜன் போல் இதுவும் ஒரு ஹார்மோன். ஓவரியில் உற்பத்தி ஆகும். இது மாதவிடாய் சரியான சுழற்சிக்கு உதவும் வேலை செய்தாலும் முக்கிய வேலை கர்ப்பப்பையை குழந்தை பிறப்புக்குத் தயார் செய்வது.
ப்ரொஜெராஸ்டோன் ஹார்மோன் கர்ப்பப்பை சுவற்றைத் தயார் செய்தல் வேலையில் ஈடுபடும். இந்த ஹார்மோன் அளவு குறையும் போது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும்.
அது மட்டுமல்ல, ஈஸ்ட்ரோஜன் போல பல செயற்பாடுகள் உண்டு. பால் சுரப்பி வளர்ச்சி, பால் உற்பத்தியில் உதவுகிறது. தாய் சேய் இணைப்புக்கும் உதவுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு கரு முட்டை உருவாகும். முதிர்ந்த கருமுட்டை மாதவிடாய் சுழற்சியில் வெளியேற இந்த ஹார்மோன் உதவுகிறது.
அது தவிர, வெறும் மாதவிடாய் மட்டுமல்ல இதன் வேலை மூளை செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது.
கர்ப்ப நேரத்தில் முட்டை உற்பத்தியை நிறுத்தி வைக்கும்.
கர்ப்பக் காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு உதவும்.
இடுப்புச் சதைகளைப் பிரசவக் காலத்தில் பலப்படுத்தும்.
அது தவிர, கர்ப்பத்தடை மருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஸ்டீராயிட் வகை.
இதன் குறைவு என்ன செய்யும்?
கர்ப்பத்தில் பொதுவாக அளவுகள் மாறுபடும். கர்ப்பம் தவிர, மற்ற நேரம் எனில் மைக்ரேன் மற்றும் தலைவலி உருவாக்கும்.
மனச் சோர்வு, மூட் ஸ்விங்ஸ், மாதவிடாய் சுழற்சி மாற்றம், மாதவிடாய் நிறுத்தம்.
ப்ரொகிராஸ்டோன் கம்மியாகும் போது ஈஸ்ட்ரோஜன் வீரியம் அதிகமாகும்.
இது உடல் பருமன், ரத்தப்போக்கு, மூட் ஸ்விங்ஸ், ஃபைப்ராயிட்ஸ்… இன்னும் சில சிக்கல்களை உருவாக்கும்.
மருத்துவம் இருக்கட்டும், இதைச் சரிசெய்ய நாம் என்ன செய்யப் போகிறோம். ஏன் எனில் மெனோபாஸுக்கும் இந்த ஹார்மோனுக்கும் தொடர்பு உண்டு.
(பார்ப்போம்)
படைப்பாளர்:

கிர்த்திகா தரன்
இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.