உணவுல ஒரு உறவு இருக்குது...
தாய்நாட்டின் சொந்த உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், அந்த உணவுகளுக்குள் தம் உறவுகளை, நண்பர்களை, தத்தம் ஊரை, நட்பை, அந்த உணவு குறித்த நினைவுகளை தினம் தினம் மீட்டெடுக்கிறார்கள்.
தாய்நாட்டின் சொந்த உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், அந்த உணவுகளுக்குள் தம் உறவுகளை, நண்பர்களை, தத்தம் ஊரை, நட்பை, அந்த உணவு குறித்த நினைவுகளை தினம் தினம் மீட்டெடுக்கிறார்கள்.
சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.
பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூயத் தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்ததன் மூலம், அறிவிப்பாளர்கள் தங்களது தேமதுரக் குரலால், தமிழ் ரசிகர்களை இலங்கை வானொலிக்காகத் தவம் கிடக்கச் செய்தனர்.
செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.
வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?
ஆறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் பேராவலில், நம்மோட வாழ்க்கையை வாழாம தவறவிடும் நமக்கு, வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காமல் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைக்கிற அமெரிக்கர்களின் கலாச்சாரம் அதிசயமாகத்தான் இருக்கு
“காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுக்கிட்டே தொடைச்சிப் போட்டுட்டோம்.
1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் அப்டிங்கற பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக, இதை விட பெரிய கட்டிடங்கள் வந்தாச்சு.