எனக்கே எனக்காகக் கொஞ்சம் நேரம்...
வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.
வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.
உடல் தேவை என்று வரும்போது அங்கே இன்னொரு உடல்தான் துணையாகத் தேடப்படுகிறது. உறவுமுறை என்பதெல்லாம் பண்பாடு என்ற ஒரு மாயக் கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறது.
அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.
மாவீரன் அலெக்ஸாண்டர், ஆஸ்கார் வைல்ட், கணித அறிவியல் தந்தை ஆலன் டூரிங், மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ஜூலியஸ் சீசர், பைரன் போன்றவர்களும் தன்பால் ஈர்ப்பாளர்களே.
அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.
“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..”
எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.
திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம்தான். அதில் அநாவசியமாகக் கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது.
வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?