கல்வியிலும் மாற்றம் தேவை
1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…
1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…
பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.
சில பெற்றோர் குண்டாக இருக்கும் பெண் குழந்தைக்குத் தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுப்பார்கள். ஆனால், எங்கே அதிகம் சாப்பிட்டால் இன்னும் குண்டாகி விடுவோமோ என நினைத்து அதையும் சரியாகச் சாப்பிடாமல், பாதிச் சாப்பாட்டை என் தட்டில் கொட்டிய பள்ளித் தோழியை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
மரியா மிட்செல் வாசார் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, தொழில்முறை வானியலாளராகவும் வானியல் பேராசிரியராகவும் பணிபுரிந்த முதல் சர்வதேசப் பெண்மணி. 1865ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரானவர் இவர் பெண்களுக்கான எமர்ஜென்சி ஃபண்டுக்கு இப்படி விளக்கம் தருகிறார். இது பெண்ணுக்கு ஏன் முக்கியம் என்றால் அவருக்குப் பிடிக்காத உறவு அவரைக் கொடுமைப்படுத்தும் கணவரிடம் இருந்து குடிகாரக் கணவனிடம் இருந்து அல்லது உடல் அளவு துன்புறுத்தும் உறவுகள் இடம் இருந்து பிரிந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த எமர்ஜென்சி கண்டு உதவும் என்று கூறுகிறார் இதைப் பெண்களின் பெற்றோர்கள் உணர வேண்டும்.
லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.
தனது மக்களை கண்ணியத்துடன் நடத்துவதும், வாழ வழிவகை செய்வதும்தான் அரசின் ஆகப்பெரிய கடமையாக இருக்க முடியும். இந்த சமூக நீதி அரசு அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.
பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.