UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

36-24-36...

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.

காகிதப் பூக்கள் - ப்ரீத்தி

“மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. ஆனால், நான் எதையும் அவ்வளவு கொண்டாடுவதில்லை. ஒரு வரையறையோடு இருக்கேனுகூடச் சொல்லலாம், தேவையான அளவு மகிழ்ச்சியும், அதே நேரம் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்துக்காக நான் நிறையவே நேரம் செலவிட்டேன். அதனாலேயே பெரிய கொண்டாட்டங்களுக்கு ஆர்வமில்லை.”

டிஜிட்டல் இந்தியாவின் கழிப்பறைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.

காகிதப் பூக்கள் - சோலு

என் அப்பா என் அம்மாவை கொடுமை செய்தார். மனமுடைந்த என்னுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என் அம்மாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட என்னை அனுமதிக்கவில்லை.

நேசித்து வாசிப்போம்!

பல வீடுகளில் பெண்கள் தொடர்கதைகளை ஒரே புத்தகமாக வைத்திருப்பார்கள். இவ்வாறும் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கும். அவற்றிக்கு எடுத்துக் காட்டாக, ஜாவர் சீதாராமன் எழுதிய ‘மின்னல் மழை மோகினி’, ‘உடல் பொருள் ஆனந்தி’, கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

அரசுப் பள்ளிகள் வெற்றிநடை போடுமா?

“அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”

கட்டற்ற சுதந்திரமா பெண்ணியம்?

பாலியல் சுதந்திரம் கட்டற்ற மோசமான விஷயமும் இல்லை. கட்டுப்படுத்தி ஒடுக்கி வைத்து அணை போடும் விஷயமும் இல்லை. அது சமுதாயப் பொறுப்போடு பக்குவமாகக் கையாள வேண்டிய விஷயம்.     

ஒண்ணுக்கும் புண்ணாக்கு விளையாடலாமா?

பண்டைய விளையாட்டுகள் – 5 ஒண்ணுக்கும் புண்ணாக்கு  இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சிறு தேங்காய் அளவிற்கு உருண்டை கல் கொண்டு வர வேண்டும். ஒரு குழி தோண்டி வைத்துக் கொண்டு, சிறிது தூரத்தில்…

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?

கணவனிடம்கூட படுக்கையில் தன் பாலியல் வேட்கை குறித்து ஒரு பெண் வாய் திறக்க முடியாத நிலையில் தானே இன்றைய இந்திய சமூகம் இருக்கிறது? மீறி வெளிப்படுத்தும் பெண்களின் மீதான கண்ணோட்டம் ஆண்களுக்கு மாறித்தானே போகிறது?

நட்பு எனப்படுவது யாதெனின்...

நிறையப் பெண்களின் குழந்தைகளுக்கு தன் தாய்க்கு நண்பர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. தந்தையின் பெண் நட்புகளைக் கூட ஏற்றுக் கொள்பவர்கள், தாயின் தோழிகளைக்கூட விரும்புவதில்லை என்பது கசப்பான செய்தி.