UNLEASH THE UNTOLD

சினிமாவுக்கு வாரீகளா? – 2

ஜெனோவா

ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…

மருமகள்

நாயகியின் அப்பா, அப்போதே நகையை விற்று, நகரத்தில் கொண்டுபோய் பெண் குழந்தையைப் படிக்க வைக்கிறார். படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் வரதட்சணைதான் முன்னணியில் இருக்கிறது எனத் திரைப்படம் சொல்கிறது. அமைதியாக இருக்கும் பெண்ணை அடிமைப்படுத்துகிறார்கள். இப்படி ஒருவிதமான கலவையாகக் குடும்பத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

மதன மோகினி

ஆதி முதலானவா என வரும் பிள்ளையார் சதுர்த்தி விழா ஆடல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் பார்த்தவரை இது தான் சினிமாவில் முதல் பிள்ளையார் சதுர்த்தி நடனம். 

பணம்

பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தான் திரைப்படமாகின. ஆனால், பணம் வெளியாவதற்கு முன்பே, பராசக்தி வெளியாகி விட்டது. பணம்தான் தனக்கு முதலில் கையில் பணம் தந்த திரைப்படம் எனப் பிற்காலத்தில் சிவாஜி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பராசக்தி

மூகத்தைக் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, உன்னால் முடிந்ததை செய்; உன் தங்கைக்காக மட்டுமல்ல ஊரில் இருக்கும் தங்கைகளுக்காகவும் சிந்தி என நாயகனுக்கு அறிவுரை சொல்லும் நாயகி இருக்கும் திரைப்படமும் இமாலய வெற்றி பெரும் என்பதற்கு, இந்த திரைப்படமும் ஒரு எடுத்துக்காட்டு.

கல்யாணம் பண்ணிப்பார்

ஆபாசம் இல்லை. குடும்பப் படம் என்றால், பெண்ணடிமைத்தனம் போன்றவை தலைதூக்கும். அவ்வாறான காட்சியமைப்புகள் இல்லை. இயல்பாகவே சில முற்போக்குக் காட்சிகள், வரதட்சணை குறித்த எள்ளல்கள் உள்ளன. ஆனால் கருத்துச் சொல்வது போன்ற எண்ணமே நமக்கு வரவில்லை.

என் தங்கை

‘ஆடும் ஊஞ்சல் போலே அலையே ஆடுதே’ பாடல் பெசன்ட் நகர் கடற்கரையில் படமாக்கப் பட்டுள்ளது. உவமைக்கவிஞர் சுரதா எழுதிய பாடல் இது. இது தான் அவர் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல். பாடியவர்கள் டி. ஏ. மோதி மற்றும் பி. லீலா

அந்தமான் கைதி

‘வெறிநாய் கடித்ததற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்?’ என ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணைப் பார்த்து, நாயகன் கேட்பது; அவரையே காதலிப்பது போன்ற செயல்கள், அப்போதைய காலகட்டத்தில் முற்போக்கானதாக இருந்து இருக்க வேண்டும்.



சிங்காரி

‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன. 

மோகன சுந்தரம்

‘மோகன சுந்தரம்’ 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  டி.ஆர்.மகாலிங்கம் அளிக்கும் ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்ஸ் அளிக்கும் மோகன சுந்தரம்; கே ஆர் ரங்கராஜுவின் துப்பறியும் நவீனம் எனத் திரைப்படம் தொடங்குகிறது.  நடிகர்கள்  டி.ஆர். மகாலிங்கம்…