UNLEASH THE UNTOLD

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

பொங்குமாக்கடல்

கைக்கடிகாரம் 8.30 என்று காட்டியது.  இந்நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி இருக்கும். இனியும் யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை, விரைந்து சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று திரும்பியவர் கால்களில் இருந்த ஷுவின் கணமும் உணர்ச்சியின் வேகமும் சேர்ந்து பின்னால் இழுத்தது.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள்

பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.

குரங்காட்டி வித்தை

அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.



பராசக்தி

மூகத்தைக் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, உன்னால் முடிந்ததை செய்; உன் தங்கைக்காக மட்டுமல்ல ஊரில் இருக்கும் தங்கைகளுக்காகவும் சிந்தி என நாயகனுக்கு அறிவுரை சொல்லும் நாயகி இருக்கும் திரைப்படமும் இமாலய வெற்றி பெரும் என்பதற்கு, இந்த திரைப்படமும் ஒரு எடுத்துக்காட்டு.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இசையின் முரட்டுத்தனத்தால் என்ன ஆனது?

ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக  எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

தவறிப் போதல்... 

முதலில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள். ஒரு மனிதனின் உடலில் பாலினம் சார்ந்த செல்கள் அதாவது ஆணுக்கு விந்தணு, பெண்ணுக்குக் கருமுட்டை இவற்றைத் தவிர மீதி எல்லா செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்தப் பாலினம் சார்ந்த செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டும்தான் இருக்கும். 46 குரோமோசோம்களிலிருந்து 23 குரோமோசோம்களாகக் குறையும் இந்த நிகழ்வை ஒடுக்கற்பிரிவு (meiosis) என்று அழைப்பர். இது பாலினம் சார்ந்த செல்களில் (gonad cells) மட்டும்தான் நடக்கும்.

கனவு தேசம் நோக்கி

ஒரு மனிதனின் கற்பனை ஆகப்பெரும் கலைவடிவமாய், உலகின் பிரமாண்டமாய் வியாபித்து நிற்பதைக் காணவேண்டுமென்ற பித்து. கண் மூடினால்  கலைநயமிக்க கட்டிடங்கள் கனவுகளாய் உலா வர,  கால எந்திரத்தில் பின்னோக்கிப் போய், அந்த பிரம்மாண்டத்துக்குள் நான் உலவிக்கொண்டிருக்கிறேன்.

பொருளாதார வலிமை பெண்களின் உரிமை!

“இந்திய ஆண்கள், வருமான ஆதாரம் இல்லாத தங்கள் மனைவிக்கு பொருளாதார வலிமையை வழங்குவது அவசியம் என்பதை உணரவேண்டும். அப்போதுதான் குடும்ப அமைப்பில் மனைவி தன்னைப் பாதுகாப்பாக உணர்வார். பொருளாதார பலம்மிக்க பெண்களே வளமான சமூகம் உருவாவதற்கு வழிவகுப்பர்”