1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின், ஆட்சி விக்டோரியா அரசி, ஆளுமைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆட்சியானது 28 ஜூன் 1858 இல் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம், 1 ஜூன் 1874 அன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. விக்டோரியா அரசி,1876 மே முதல் நாள், இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்டார். 22 ஜூன் 1948 வரை பயன்படுத்தப்பட்ட இந்தப் பேரரசர்/ பேரரசிப் பட்டம் நிலைத்திருந்தது. இதன்படி, பேரரசர் அல்லது பேரரசியின் உருவம் இந்திய நாணயத்தில், அரசாங்க கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றில் இடம்பெற்றது.
ஜனவரி 1, 1877 அன்று முதல் டெல்லி தர்பார் ((Delhi Durbar) நடைபெற்றது.
இது டெல்லியில் உள்ள முடிசூட்டு பூங்காவில் (Coronation Park) நடத்தப்பட்ட கூட்டம். இது, 1877, 1903 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை நடைபெற்றது. 1911 தர்பாரில் மன்னர், ஐந்தாம் ஜார்ஜ் கலந்து கொண்டார்.
1947 ஆம் ஆண்டு நாடு, இந்தியா மற்றும் பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றது.
சிலோன் (இலங்கை) 1793 -1798 மெட்ராஸ் பிரசிடென்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.
1858 இல் பிரிட்டிஷ் ராஜ் தொடங்கும் போது, கீழ் பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது; மேல் பர்மா 1886 இல் சேர்க்கப்பட்டது. 1937 அது ஒரு தனி பிரிட்டிஷ் காலனி ஆனது. அதுவரை இந்திய அஞ்சல்தலைகள் தான் அங்கும் பயன்பட்டன. 1948 இல் பர்மா விடுதலை அடைந்தது. இப்போது மியான்மர் என்று அழைக்கப் படுகிறது.
ஏடன் தலைமை ஆணையரின் மாகாணமும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் 1937 இல் ஏடன் காலனி என்று அழைக்கப்படும் ஒரு தனி காலனியாக மாறியது.
பிரிட்டிஷ் சோமாலிலாந்து 1884 முதல் 1898 வரை,
ஜலசந்தி குடியிருப்புகள் (சுருக்கமாக 1858 முதல் 1867 வரை).
1947 வரை பாரசீக வளைகுடாவின் மாநிலங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்துள்ளன.
இவ்வாறாக பல நாடுகள் தொடக்கத்தில் பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் தலைகளைப் பயன்படுத்தியுள்ளன.
Victorian அஞ்சல் தலைகள். இவை 1882ஆம் ஆண்டு வெளியானவை.
1900 வெளியான Victorian அஞ்சல் தலை
பேரரசி விக்டோரியா 22 ஜனவரி 1901 அன்று இறக்க, அவரது மகன், ஏழாம் எட்வர்டு பிரிட்டனின் அரசராக 1901 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் முடிசூட்டினார்.
அது குறித்த கல்வெட்டுகள், அப்போது பல ஊர்களில், பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றன. கீழே இருக்கும் கல்வெட்டு, வள்ளியூர் முருகன் கோவிலில் உள்ள கல்வெட்டு. கள்ளிகுளம் பனியன்னை கோவில் முன்னாலும் இருந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.
1903 ஏழாம் எட்வர்டு படம் பொறித்த அஞ்சல் தலைகளைப் பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்டது.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.
வணக்கம் இப்பகுதியில் இருப்பவை ஐந்தாம் ஜார்ஜ் அஞ்சல் தலைகள் அல்ல; ஏழாம் எட்வர்டு அஞ்சல் தலைகள். தவறுக்கு வருந்துகிறேன்.