விதவை, மலடியின் எதிர்ச்சொல் என்ன?
பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.