UNLEASH THE UNTOLD

Tag: Yamini

எல்லைக்கோடு தெரியுமா?

அது எவ்வளவு நெருக்கமான உறவோ நட்போ அந்த எல்லையை மதிக்கும் போது, உறவு இனிமையாகவும் பலமாகவும் உருவாகிறது. இதற்கு முதலில் நம்மை நாம் அறிந்திருக்க வேண்டும், எத்தனை தூரம் மற்றவர் தலையீட்டை அனுமதிக்கலாம், யாரை எங்கே நிறுத்துவது நம் மன நிம்மதிக்கு நல்லது என்கிற தெளிவு தேவை. சில நேரம் இந்த எல்லையின் காரணமாகச் சில உறவை, நட்பை இழக்க நேரலாம். தன் சுய நேசமும் மதிப்பீடும் நன்றாக உள்ள ஒருவர் அதற்கஞ்சுவதில்லை.

வாங்க, சுய மதிப்பீடு செய்வோம்!

தன் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவர் உலகத்தை அநாயாசமாக கவர்கிறார். அவரிடம் அறிவு, அழகு, கல்வி, செல்வம், ஆற்றல் எல்லாம் நிறைந்திருக்க வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனாலும் நமக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். ஏன்?

நான் என்பது...

நமது கட்டுபாட்டில் உள்ள ஒன்றை மேம்படுத்த முயலுவதும், கட்டுபாட்டில் இல்லாத காரணிகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுய நேசிப்பின் அடிப்படை.

அழகிய நான்...

எனதருமை தோழிகளே நன்றாகச் சாப்பிடுங்கள், நல்லதைச் சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். எண்ணங்கள் அழகாகட்டும், உங்களின் முடிவுகளைச் சுயமாக எடுங்கள், அதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளால் வரும் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிருந்து மிளிர்வதை ஆனந்தமாக உணர்வீர்கள்.