UNLEASH THE UNTOLD

Tag: Society

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

இலக்கணம் மாறுதே... 11

“எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கும், இந்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது, உனக்கு வழிகாட்ட முடியுமே தவிர உனக்காக ஓடுவது இயலாத காரியம். நீதான் ஓட வேண்டும். எனவே நீதான் முயற்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்தப் புத்தகங்களை வாசி. மேலும், ஜாதி எந்த அளவிற்கு மனிதகுல மாண்பைச் சீரழிக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், மத ஒற்றுமை, அரசியல் குறித்த, நமது உரிமை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி தருபவர்கள் என இணையத்தில் விழிப்புணர்வையும், தர்க்க சிந்தனைகளையும் நிறைய பேர் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே தெரிந்து கொள்வது எளிதுதான். ஹெர் ஸ்டோரிஸ் இணைய தளத்தின் கட்டுரைகளையும் வாசிக்க தவறாதே.”

கிச்சன் செட்டும் ரோபாட் செட்டும்

வெண்பாவை அருகில் அழைத்த அத்தை, அவளுக்கான பரிசுப் பொருளைக் கொடுத்தார். ரோபாட் உருவாக்கும் செட். அதற்கான செய்முறை விளக்கங்களுடன் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நிலாவே பரவசமானாள்.

“தாங்க்யூ அத்தை! போன தடவை மாதிரி கார்தான் இருக்கும்னு நினைச்சேன். இது ரொம்ப சூப்பரா இருக்கு!”

பொறுப்பாக எப்போது நடந்துகொள்ளப் போகிறோம்?

ஒருவரை விமர்சிக்க, தூற்ற தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியை அளவீடாகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெளிப்படுவது நான் அப்படியானவர் இல்லை, ரொம்ப பர்பெக்ட் என்பதைத்தான் வெவ்வேறு வகையில் கூற முயல்கின்றனர்.

மாற்றம் வரும் நாள் என்றோ?

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.

'தேவதை' எப்படிச் 'சூனியக்காரி'யாக மாற்றப்பட்டார்?

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

முக்காடுகளை ஆண்களுக்கு அணிவித்த துவாரெக் பெண்கள்!

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

'அரேன்ஜ்டு மேரேஜ்' பரிதாபங்கள்... 2 

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

ஓர் ஆணுக்கு இவ்வளவு ரோஷம் இருக்கலாமா?

என் புருசனைத் தானே நான் உரிமையுடன் அடிக்க முடியும். ’லேசாகத்தான் தட்டினேன். கோபித்துக் கொண்டு வந்து விட்டான்’ என்று வருத்தப்பட்டார்.

நீயே சொல் அருண். ஓர் ஆணுக்கு இவ்ளோ ரோஷம் இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? நீயும்தான் ஒரு குடும்பத்தில் வாழப் போயிருக்கிறாய். எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழவில்லையா? உனக்கு நேரமிருக்கும் போது தம்பியை அழைத்துப் புத்திமதி சொல்.