UNLEASH THE UNTOLD

Tag: scientist

அமெரிக்காவின் முதல் தொழில்முறைப் பெண் வானவியலாளர் மரியா மிட்செல்

மரியா மிட்செல் வாசார் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, தொழில்முறை வானியலாளராகவும் வானியல் பேராசிரியராகவும் பணிபுரிந்த முதல் சர்வதேசப் பெண்மணி. 1865ஆம் ஆண்டில் அவர்  அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

அங்கீகாரம் கிடைக்காத லீஸ் மைட்னர்

1917ஆம் ஆண்டு ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதன் பெயர் புரோடாக்டினியம். (proactinium). அவர் யூதர் என்பதால் அதிலும் ஒரு சிக்கல் வந்தது. 1933ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலரானார். அவர் ஆட்சி வலுப்பெற்றதும் யூதர்களைப் பணிகளில் இருந்து நீக்கினார். எப்படியோ 1938 வரை ஜெர்மனியில் தாக்குப்பிடித்தார் லீஸ்.

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.

மாபெரும் விஞ்ஞானி ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்

ரோசலிண்ட் எடுத்த எக்ஸ்ரே படத்தை வாட்சன், கிரிக்கிடம் ரோசாலிண்ட்டின் அனுமதியின்றி வில்கின்ஸ் காட்டினார். வாட்சன், கிரிக் ஏற்கெனவே டிஎன்ஏ அமைப்பைக் கண்டுபிடிக்கவும் அது குறித்த தகவல்களை அறியவும் செய்து வந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக்கியது ரோசாலிண்ட்டின் இந்தப் படம். இந்தப் படத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சிகள் செய்து, டிஎன்ஏ வடிவம் இப்படி இருக்கலாம் என ஒரு கோட்பாட்டை நிறுவினர் இருவரும்.

நோபல் ராணி!

2 முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டது.