UNLEASH THE UNTOLD

Tag: Rajathilagam Balaji

சம்பாதிப்போம்

திருமணத்திற்கு முன் சுயமாகச் சம்பாதித்த பெண்களில் பலர், திருமணத்திற்குப் பிறகு சம்பாதிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றெல்லாம் அவ்வளவு எளிதாகக் கூறி விட முடியாது. வீட்டின் கடமைகள் என்கிற பெயரில் பெண்களுக்காகவே பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட…

இணையே! துணையே!

இந்தத் தலைப்பின் வரிகள் போல்தான் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்கிற அதீத எதிர்பார்ப்புடனும், பல கனவுகளுடனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். திருமணம் என்பது ஓர் அழகான பந்தம்தான், அதை மறுப்பதிற்கில்லை….

ஆயுள்கால நண்பன்

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை வேலை வேலை என்று அடுத்தடுத்த வேலைகளைப் பற்றியும், மறுநாளுக்கான தேவையைக் குறித்து மட்டும் சிந்தையில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதில்தான் பெரும்பாலானோர்…

எது அழகு?

இன்றைய குழந்தைகளிடம் அழகு குறித்த புரிதலையும், வியாபார நோக்கத்தில் அழகு குறித்த தவறான வதந்திகளை உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும்  குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

உங்களுக்கு ஒரு கடிதம்…

இளமையில் சம்பாதித்து சேர்த்த பணத்தை, முதுமையில் மருத்துவச் செலவிற்குப் பயன்படுத்துவதற்காகவா இத்தனை ஓட்டம்? ஓடும் ஓட்டத்தை நிறுத்தி, சற்று உங்களை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். “உண்மையிலேயே நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் உலகிலேயே மிகப் பெரிய மில்லியனர்”    

சமையலறை எனும் சாபம்

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

மாற்றம் வரும் நாள் என்றோ?

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.

எப்படி இருந்தாலும் குத்தமா?

பெண்களின் முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றால் மட்டும் சும்மாவா விடப் போகிறார்கள்? கணவன், குழந்தையைவிட அவளுக்குக் காசுதான் முக்கியம் என்று அடுத்த அம்பைப் பாய்ச்ச தயாராகவல்லவா இருக்கிறார்கள்.

அலுவல் பணிச் சுமையின் காரணமாக, மாதத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் விஷயம் மட்டும் வெளியே தெரிந்துவிட்டால் போதும், ஒரு நாள்கூட வீட்டில் அந்தப் பெண் சமைக்கிற பழக்கமே கிடையாது என்று அடுத்த கதை கட்டத் தொடங்கிவிடுவாார்கள்.

திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்ததா?

எது எப்படி இருந்தாலும் சரி, திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்தது என்று சோர்ந்து அமைதியாகி விடாதீர்கள்! நமக்காவும் நாம் வாழ வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் இந்தவோர் அழகான வாழ்க்கையில் நமக்கென்ற ஒரு தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து, அடுத்த தலைமுறைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம். நம் இலக்கை அடைய பல தடைகள் வருவது இயல்பே.