UNLEASH THE UNTOLD

Tag: periods

எது தீட்டு?

அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகள்

பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?

தீட்டைப் பேசிய முதல் பெண்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.