தந்தையுமானவர்
இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?
இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?
அம்மா பிரசவம் பார்ப்பதில் தனித்திறமை பெற்றிருந்தார். ஒரு முறை எய்ட்ஸ் நோயுற்ற பெண்ணிற்குப் பிரசவம் பார்த்ததால், கலெக்டரின் பாராட்டைப் பெற்றார்.
குழந்தைக்கும் பாட்டிக்கும் தெரிந்த ஒரு பிரபலத்தோடுதான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்தப் பிரபலம் என் அம்மா ரமணி. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்.
’’எல்லா நேரமும் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. காசு இல்லாத நேரத்தையும் நாம கடந்துதான் போகணும். அது உனக்குப் புரியணும். அதுக்குதான்!’’
தாயில்லாமல் வளர்ந்த என் அம்மா திருமணம் ஆன சில நாட்களிலேயே என் பெரியப்பா பிள்ளைகளுக்குத் தாயாக மாறினார். மூத்த அண்ணனுக்கு 9 வயது, கடைசி அண்ணனுக்கு 3 வயது.