UNLEASH THE UNTOLD

Tag: Movie

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

ராஜகுமாரி

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார்.

குழந்தைகளை இயல்பாக வாழவிடுவோம்!

ஒருவேளை சாப்பாட்டுக்காக, வறுமை காரணமாக குழந்தைகளை வேலை செய்ய வைப்பது போக இப்பொழுது அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ், புகழின் மேல் இருக்கும் போதை கூடவே வருமானம் போன்றவற்றிற்காக சமூக வலைத்தளங்களில் \ ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளைத் தவறான முறையில் பெற்றோர்களே ஈடுபடுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்க செயல்.

எனோலா ஹோம்ஸ்

“உனக்கு உலகம் மாறத் தேவை இல்லை. ஏனென்றால் உனக்கு உலகம் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.” இப்படி அர்த்தமும் ஆழமும் நிறைந்த வசனங்கள் கதையில் அப்படியே பொருந்திப் போகும். எனோலா ஹோம்ஸ் இன்றைய பல பெண்களின் பிரதிபிம்பம். இன்னும் பல பெண்களின் வாழ்வு சிலந்திவலை போன்ற சமூக விதிமுறைகளிலும் குடும்ப கௌரவத்தின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவுக்குப் போகலாமா?

தலை விண்விண்ணென்று வலித்தது. இன்று வேண்டாம், இன்னொரு நாள் படத்துக்குப் போகலாம் என்று சொல்லலாமா என்று யோசித்தான். மனம் வரவில்லை. ஆதியே அத்திப் பூத்தாற் போலத்தான் இவனுடன் வெளியில் வர உற்சாகம் காட்டுவாள்; மற்றபடி தோழிகள்தாம் அவளது உலகம், ஊர் சுற்றல் எல்லாம் அவர்களுடன்தான் பெரும்பாலும்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழலாம்!

ஒரு காட்சியில் ஜெயபாரதியின் மாமியார், ஜெயபாரதியின் அப்பாவிடம், “நீங்கள் உங்கள் மனைவியை அடித்ததில்லையா?” என்பார், அதற்கு அவர், “ஆமாம், நான் இதுவரை அடித்தது இல்லை” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்?

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

இந்தியாவில் 95 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கணவனிடம் அடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். மனைவியை அடிப்பது என்பது படித்தவர், படிக்காதவர் , பணக்காரர், ஏழை என்று பாகுபாடு இல்லாமல் ஆண்களிடம் இருந்துவருகிறது.

நட்சத்திரம் நகர்கிறது - அம்பேத்கரிய பெண்களுக்கு அவமரியாதை

ஓர் அறிவுள்ள, புத்திசாலிப் பெண்ணாக இருக்கும் ரெனே, கருத்து வேறுபாடுகள் உள்ள ஓர் ஆணுடன் தரம் தாழ்ந்து பாலியல் சுகத்தைத் தர ஏன் நினைக்கிறாள்? இனியன், தன்னைப் பாலியல் சுரண்டல் செய்து ஏமாற்றுகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறனற்ற பெண்ணா ரெனே? இது தலித் பெண்ணியம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஒரு பாலியல் தேடலுக்காக எந்தவொரு தலித் அம்பேத்கரிய பெண்ணும் தனது சுயமதிப்பையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டாள்.

இது செங்கேணியின் கதை

ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.