UNLEASH THE UNTOLD

Tag: Monisha

குற்றவுணர்வு 

அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது.  எட்டி அதனை அணைத்தவள், அருகே…

வலி

அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….

அம்மாவின் ஞாபகம்

அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…

கண்ணாடிப் பாத்திரம்

அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…

சஞ்சலம் 

அத்தியாயம் 9 சந்துருவைச் சந்தித்துவிட்டு வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவனே அகல்யாவை செல்பேசியில் அழைத்துப் பேசினான். அப்போதுதான் அவனுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது பற்றிக் கூறினான்.   சந்துருவின் முன்னாள் மனைவியும் ஆட்சியர்தான்….

அறிவுரைகள்

அத்தியாயம் 6 “ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு…

14. பலதரப்பட்ட குடும்ப நாவல்கள் 

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் இணையத்தில்தான் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார்கள். கள ஆய்வுகள் செய்து எழுதப்படும் அபுனைவுகள் அல்லது இலக்கியத்தரமான நாவல்களுடன் குடும்ப நாவல்களால் போட்டி போட முடியாது. போட்டி போடவும் தேவையில்லை. வெகுஜன வாசிப்பு என்பது இதுதான். இதில் எதார்த்தம் குறைவாகவும் கற்பனை கூடுதலாகவே இருக்கும்.

நீலச்சாயம்

சமூக ஊடகங்களில் இதெல்லாம் இயல்புதான். முக்கியமாகப் பொதுவெளியில் வந்து சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் பெண்களின் வாயை அடைக்க, அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் என்பது ஒழுக்கம்தான். அதனைக் கேள்விக்குட்படுத்திக் கூனிக் குறுகிப் போகச் செய்வது.

எழுத்து வியாபாரம்

Kdp அதாவது kindle selectஇல் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களுக்கு Kindle Edition Normalaized pages (Kenp read counts) அடிப்படையில்தான் ராயல்டி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வாசிக்கப்படும் பக்கங்களைப் பொறுத்தது.  ஆனால், இந்த எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டால் சிக்கல்தான். அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை அப்படியே அறுபதாயிரம் வரை சரித்து நமக்கான ராயல்ட்டியை ஆறாயிரத்திற்கும் கீழ் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

நூதன அறிவுத் திருடர்கள் ஜாக்கிரதை!

ஒரு நாவலில் உள்ள காட்சிகளை அல்லது கதைக்கருவை  அப்படியே எடுத்துத் தங்கள் கதைகளில் பயன்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்பிரேஷன் அல்லது இன்ப்ஃளுயன்ஸ் என்று இங்குள்ள சிலர் சமாளிக்க வேறு செய்கிறார்கள். நிறையப் பேருக்கு இன்ஸ்பிரேஷன், இன்ப்ஃளுயன்ஸ், காப்பி இது மூன்றுக்குமே வித்தியாசம் தெரிவதில்லை.