வாழ்வது ஒருமுறை...
எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.