UNLEASH THE UNTOLD

Tag: feminism

நீயும் பெண்ணியவாதியா? - இலக்கணம் மாறுதே... 12

சிலர் பெண்ணியம் பேசுபவர்களை, ஏதோ தங்களுக்குத் தீங்கிழைப்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் சம உரிமையுடன் நடத்தப்படும்போது அங்கு சுரண்டல்கள் இல்லை.
ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வைத்துக்கொள்வோம். அந்தப் பெற்றோர், ஆண் குழந்தைக்கு அதிக கவனிப்பு கொடுத்து, சகோதரியை நீதான் கவனிக்க வேண்டும். நீதான் சம்பாதித்து, செலவு செய்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஆண் குழந்தையும் பொறுப்பு அனைத்தையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டு, தனக்கான வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அடுத்தவரை சுதந்தரமாக வாழவிடுவதும் இல்லை. ஆனால், பெண்ணியம் என்பது அவரவர் ஆட்டத்தை ஆடுவது . அவரவர் பொறுப்பை எடுத்துக்கொள்வது.

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.

திருமணத்திற்காகவே வளர்க்கிறோமா நம் பிள்ளைகளை?

மதன் மோகன் மாளவியா பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஆதரித்தவர். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்ற கருத்தை தவறு என்று கூறி மூர்க்கமாக எதிர்த்தவர் பாலகங்காதர திலகர்.

கட்டற்ற சுதந்திரமா பெண்ணியம்?

பாலியல் சுதந்திரம் கட்டற்ற மோசமான விஷயமும் இல்லை. கட்டுப்படுத்தி ஒடுக்கி வைத்து அணை போடும் விஷயமும் இல்லை. அது சமுதாயப் பொறுப்போடு பக்குவமாகக் கையாள வேண்டிய விஷயம்.