UNLEASH THE UNTOLD

Tag: Chandragiri Atrangaraiyil…

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

அலியைப் பார்த்த பிறகு, அவனுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டுமென்று ஆனதும் அவள் அப்போதே பாதி இறந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கற்பனை உலகம் அவளைக் கைவீசி அழைத்துக் கொண்டிருந்தது.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

”உம்மா இந்தக் கலியாணத்தினாலேயே எனக்குக் கொழந்தையாயிட்டா என்ன பண்றது?” பாத்திமா அதிர்ந்துபோனார். ஆமாம், தான் இதுவரை இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. அப்படி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

ஒருவனை ஒரு இரவுக்காக மணந்துகொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்தபின்னால் ரஷீதை மீண்டும் மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ புதுவீட்டுச் சலீமையாவது மணந்துகொள். நீ ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.’

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

தன் காம உணர்வுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மனைவியைப் பயன்படுத்திக்கொண்ட கணவனுக்கு, மனைவிக்குத் தலாக் கொடுத்த நாளிலிருந்து அந்தக் குழந்தைக்கு அவனே உரிமையாளன். குழந்தை, கணவன் யாருமே தன்னுடையவரல்ல.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

‘தலாக்’ வாங்கிவந்து மூன்று மாதங்களாகியிருந்தன. இன்றையிலிருந்து அவள் ரஷீத் கொடுத்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அவளைப் பொருத்த வரையில் அவன் அந்நிய ஆடவன்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

இனிமேல் நாதிராவுக்கும் ரஷீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 105 ரூபாய் மஹரை ரஷீத் கடையிலிருந்து கொண்டுவந்து மாமனாரின் கையில் கொடுத்தான். .

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

குழந்தைகளின் மீது உரிமை, அதிகாரம், பொறுப்பு எல்லாமே தந்தைக்குத் தான். ஆண் குழந்தையானால் ஏழு ஆண்டுகள் வரையும் பெண் குழந்தையானால் 14 ஆண்டுகள் வரையிலும் தாயோடு இருக்கலாம்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

நாதிரா மலைத்துப்போய் இடி விழுந்தவளைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அவர்களிருவரும் வேகவேகமாக நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தனர். தூசியைக் கிளப்பியவாறு கார் புறப்பட்டுப் போயிற்று.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

”உம்மா, உங்க மருமகனுக்கில்லாத அழைப்பு எனக்கெதற்கு? அவங்ககிட்ட கேக்காம நான் இங்கெ வந்ததே தப்பு. நீங்களே போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.