UNLEASH THE UNTOLD

Tag: Aangal Nalam

தொழிலதிபர் சுமந்துடன் ஒரு பேட்டி

நெறியாளர். ஓ! பரவாயில்லை. உங்கள் பெற்றோர் உங்கள் இருவரையும் பெண்கள் போலத் தைரியமாக வளர்த்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையாரின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

நானும் என் மனைவியும் அழகுக் கறுப்பு. இவன் மட்டும் எப்படியோ இப்படி வெள்ளையாகப் பிறந்து தொலைத்துவிட்டான். சிறு வயது முதலே பார்க்காத வைத்தியம் இல்லை. மிளகு, கடுகு, கருஞ்சீரகம் அரைத்துப் பூசிக் குளிக்க வைத்திருக்கிறேன். நண்பகல் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் உடல் விரைவில் கருக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி அதையும் செய்து வருகிறான். இருந்தும் மேனி பூஞ்சைக்காளான் பூத்தது போல் வெள்ளை நிறமாகவே உள்ளது.

வாசக்காப்பு

“சரி, ஏன் எல்லாரும் இது பெண்கள் கருத்தடையவிட நல்லதுனு சொல்றாங்க?”

“ஏன்னா அதுதான் 100% உண்மை. இப்ப உனக்கு லோக்கல் அனஸ்தீஷியாதான் குடுத்தாங்க. ரெண்டு நாள்ல இயல்பாகிடுவே. ஆனா, பெண்கள் கருத்தடை ரொம்ப சிக்கல். அதுக்கு ஜெனரல் அனஸ்தீஷியா கொடுக்கணும். குணமாகவும் ரொம்ப லேட்டாகும். முன்னாடி காலத்துல அறிவில்லாம அப்படிலாம் பண்ணி இருக்காங்க. இடியட்ஸ்.”

இனிமேல் வருண் மீது கை நீட்ட மாட்டேன், அத்தை!

வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.

டிபியில் என்ன போட்டோ வச்சிருக்கே?

“இல்லம்மா, காலம் கெட்டுக் கிடக்கு. சோஷியல் மீடியா ரொம்ப மோசமா இருக்கு. பொண்ணுங்களுக்கென்ன எப்படி வேணா இருப்பீங்க. வீட்டு ஆம்பளைங்க மேல ஒரு சொல்லு யாராவது சொல்லிட்டா குடும்ப கௌரவம் கெட்டுப் போயிடும்மா. அதுக்குதான் சொல்றேன். கொஞ்சம் கண்டிச்சு வையி.”

வருண், உனக்கு ஆட்டிட்யூட் ப்ராப்ளம்!

வருணுக்குத் தொண்டை அடைத்தது. எப்போதும் இப்படித்தான். கஷ்டப்பட்டு ஒரு வேலைக்கான அத்தனை தயாரிப்புகளையும் செய்து முடிப்பான். பெயர் தட்டிக் கொண்டு போவது ஷீலாவோ ஜான்சியோதான். இவனுக்கென்று சரியாக அப்போது வீட்டுக் கடமைகள் லீவோ பெர்மிஷனோ வேறு போட வைக்கும்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு வீட்டுச் சுத்தத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனை தரும் விஷயம். சீரியல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேரத்தைப் போக்காமல் தினமும் அரை மணி நேரமாவது அமர்ந்து ப்ரஷ்ஷைக் கொண்டு அழுத்தித் தேய்த்திருந்தால் பாத்ரூம் துலங்கி இருக்கும்.

‘ஓப்பன் டே’க்கு வருவாளா நிலா?

அம்மாக்கள் அனைவரும் வேலையில் இருக்க, அப்பாக்களின் தகவல்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் பொறியியல், முதுகலைப் பட்டங்கள் முடித்திருந்தார்கள். அறிவியல், கணிதம், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தார்கள். ஆனால், வேலை என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் பெரும்பாலும் ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ என்று இருந்தது.

வெண்பாவும் வேந்தனும்

”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள்.

லஞ்ச் டைம்

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.