முடி இருந்தால் தான் குடும்பப் பெண்ணா?
நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை ‘நல்ல பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது. குட்டைமுடிப் பெண்ணை போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். பெண்ணின் முடி குறையக்குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக பொதுச் சமுதாயம் கருதுகிறது.
