கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சி…

உங்கள் உணர்வுகளைத் தூண்டி, உறவுக்குத் தயாராக நிபுணர்கள் சொல்லும் மூன்றாவது வழிமுறை என்ன தெரியுமா

கூடல் கற்பனைகள்’ (Sexual fantasies)

2014 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 56.5% பெண்கள், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவு கொள்வதைப்போல் கற்பனை செய்து கொள்வதாகவும், 64.6% பெண்கள் உறவின்போது தாங்கள் ஆணின் மீது ஆதிக்கம் செலுத்துவதுபோல கற்பனை செய்து கொள்வதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் பல்வேறு காலகட்டங்களிலும் ஆண், பெண் இருபாலினரிடமும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் ஒன்று கூடல் கற்பனைகள்பற்றியதுதான்

ஜோன்ஸ் எனும் நிபுணர், இத்தகைய கற்பனைகளின் மூலம் உணர்வுகளைத் தூண்டி தங்களை உறவுக்குத் தயார்படுத்திக் கொள்வதென்பதை மிகவும் சாதாரண விஷயமாகவே மக்கள் கருதுகிறார்கள்; இம்முறையைப் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை என்கிறார்

நம் ஊரில் எத்தனை பேர் இப்படி பகிரங்கமாக ஒப்பு கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், உறவுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள, தாங்கள் கையாளும் கற்பனைகள் என்னென்ன என்பதை மேற்கத்தியர்கள் பட்டியலாகக் கொடுத்துள்ளனர்

அவை

1. சாதரணமாக தாங்களோ அல்லது வேறு யாராவதோ உறவு கொள்வதைப் போல் கற்பனை செய்து பார்ப்பது

2. புதிதாக தாங்கள் சந்தித்த ஒரு நபரை, முன் பின் அறிமுகமில்லாத, அன்றுதான் பொது இடங்களில் சந்தித்த ஒரு நபரை அவருடன் உறவு வைத்துக் கொள்வதைபோல் கற்பனை செய்து பார்ப்பது

3. கணவன், மனைவி இருவருமே பேசி வைத்துக்கொண்டு தங்களிருவரையுமே வேறு நபராக மாற்றி யோசித்துக் கொள்வது(ROLEPLAY). நம் ஊரில் மனைவியர்களிடம் இப்படி யாரவது செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாலியல் தொழிலாளர்களிடம் இப்படி செய்வதாக அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

4. தனக்குப் பிடித்த ஒரு நபராக, தன் துணையைக் கற்பனை செய்து கொள்வது

5. பிரபல நபர்களுடன் உறவு கொள்வதைப்போல் நினைத்துக் கொள்வது

Photo by engin akyurt on Unsplash

பாலியல் நிபுணரும் ஆராய்ச்சியாளருமான டோனா வோரியோவோ (Dona Oriowo) இந்தக் கற்பனைகளைப் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்

ஒன்று, நீங்கள் கற்பனை செய்யும் நபரின் மீது உண்மையிலேயே உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும், அவருடன் இப்போது அந்த உறவு நிகழக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் கூட அதை இயல்பாக எதிர்நோக்கக்கூடிய அளவுக்கு நீங்கள் தயாரான மனநிலையுடனிருக்கவேண்டும்

இரண்டாவது விஷயம், இந்தக் கற்பனைகளால் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தை விட, உங்கள் துணையுடன் இப்போது நீங்கள் கொள்ளும் உறவில் இன்னும் சிறப்பாக நீங்கள் செயல்பட இந்தக் கற்பனைகள் உதவ வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாகயிருக்க வேண்டும்

பல பெண்கள் மற்றும் ஆண்களுடன் தான் கலவிகொள்வதாகக் கற்பனை செய்வது, தங்கள் துணைவர் வேறு ஒரு நபருடன் உறவு கொள்வதுபோல கற்பனை செய்வது, வேறு வித்தியாசமான இடங்களில் கூடுவதுபோல கற்பனை செய்வது, பார்ட்டிகளில் அத்தனை ஆண்களும் தன்னை அடைய விரும்பி அழைப்பதாகவும் அதில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து உறவு கொள்வதாகக் கற்பனை செய்வது, தங்கள் முன்னாள் காதலனை நினைத்துக் கொள்வது, தாங்கள் பார்த்த திரைப்படக் காட்சிகளில் வருவதைப் போல் எண்ணெய் மசாஜ் செய்துவிடுவது என்று கற்பனை செய்து கொள்வது இந்த லிஸ்ட் இன்னும் நீளமாய்ப் போய்க்கொண்டேயிருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் நடக்காத சில விஷயங்களை இப்படி கற்பனை செய்து தங்கள் உணர்வுகளைத் தூண்டிக் கொள்வதால், தங்கள் துணையுடன் கூடுவதற்கு தாங்கள் தயாராக முடிவதாகவும் இந்தக் கற்பனைகள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் வரம்பு மீறாமலிருக்க உதவுவதாகவும் கணவனிடமிருந்து போதிய முன் விளையாட்டுகள் இல்லாத வறட்சியைப் போக்குவதாகவும் அதனால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதாகவும் பல பெண்கள் கூறியிருக்கிறார்கள்

சரி, விட்ட இடத்திலிருந்து விஷயத்தைத் தொடர்வோம். கருமுட்டை உருவாவதற்கு முந்தைய நாட்களில், அதாவது பெண்ணுறுப்பின் வறட்சியான காலகட்டத்தில்கெட்டியாகவும் வறண்டுமிருக்கும் செர்விகல் ம்யூகஸ்’, அவள் கருத்தரிக்கத் தயாராயிருக்கும் நாட்களின்போது பளபளப்பாகவும் தெளிவாகவும் அதிக வழுவழுப்புத் தன்மையுடனும் மாறி விடுகிறது. அப்போதுதான் விந்தணுக்கள் எளிதாக நீந்திச் சென்று கருமுட்டைகளுடன் இணைய முடியும், அவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்காக அதன் பயணப்பாதையை எளிதாக்கவே இது இயற்கை செய்துள்ள ஏற்பாடு

வெஜனைல் லூப்ரிகன்ட்’ (Vaginal lubricant) எனப்படும் பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவத்தையும் இந்த செர்விகல் ம்யூகஸையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். வெஜைனல் லூப்ரிகென்ட் எப்போதும் அங்கேயேதானிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் வறண்டிருக்கும் அது, பாலியல் ரீதியாக ஒரு பெண் தூண்டப்படும்போது அதிகப்படியாக சுரக்கத் தொடங்குகிறது. ‘செர்விகல் ம்யூகஸ்ஒரு பெண் கருத்தரிக்க ஏதுவான நட்களில், அதிகப்படியான வழுவழுப்புத் தன்மையை உருவாக்குகிறது

ஒரு பெண் இந்த ம்யூகஸ்சுரப்பு அதிகரிக்கும் காலகட்டத்தில், எப்படியெல்லாம் அதைத் தன் கணவனிடம் வெளிப்படுத்துவாள்?  ம்யூகஸ் சுரப்புஅதிகமாயிருக்கும் நாட்களில், அவளது பெண்ணுறுப்பில் ஈரப்பதம் அதிகமாயிருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவைப் போல பார்ப்பதற்கு பசும் வெண் நிறத்திலும், மிகவும் நெகிழ்வுத் தன்மையுடனுமிருக்கும்.

மேற்கத்திய நாடுகளிலுள்ள பெண்கள், சுற்றி வளைக்காமல், ‘ இன்று நான் தயார்நிலை காலகட்டத்தில் இருக்கிறேன்’, அல்லது… I feel horny … ‘நான் இன்று உறவு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்…’, ‘கூடல் வேண்டுமென உணர்கிறேன்…’, ‘ஏன் இன்று நாம் நமக்கு ஒரு மகிழ்ச்சியான இரவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது…?‘ ‘Why don’t we have a good time today..?’ ‘இன்று நாம் படுக்கையில் நெருக்கமாயிருப்போமா..? என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவார்கள்

நான் பேசிப்பார்த்த பல வெளிநாட்டுப் பெண்களும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஜிலேபி சுற்றும் கதையெல்லாம் வெள்ளைக்காரப் பெண்களுக்குக் கிடையாது… 

Photo by Dainis Graveris on Unsplash

ஆனால், நம் ஊர் ப்பெண்கள்இந்தக் காலகட்டத்தில் நேரடியாக விஷயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துத்தான், ‘ பக்கத்து இலைக்கு பாயசம்’ தோரணையில் வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவி, உங்கள் அருகாமை வேண்டும் என்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்கும்போது அவற்றை உதாசீனப்படுத்தாதீர்கள்

‘ சீக்கிரம் வீட்டுக்கு வர்றீங்களா…?

‘ பூ வாங்கிட்டு வர்றீங்களா…?’

இன்னைக்கு வெளியே எங்கேயும் போக வேண்டாம்…’ (குறிப்பாக உங்க வீட்டுக்குஹாஹாஹா…) என்பது போன்ற வார்த்தைகளை, மேற்கத்திய சாயல் இல்லாத நம்மூர்ப் பெண்கள் சொல்வார்கள்.  

இப்படியெல்லாம் உங்கள் மனைவி சொன்னால்… “ இன்னைக்கு நான் ரெடிநீங்க ரெடியாஇல்லேன்னாலும் ரெடி ஆகிக்கங்க…” என்று அவள் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவுகள் கருமுட்டை உருவாகும் நாட்களில் (Ovulation period) தூண்டப்படும்போது உடலுறவு கொள்ளும் ஆசையும் அதிகரிக்கிறது. உடலுறவில் உண்மையான உச்சக்கட்டத்தை அடையும்போது ஆக்ஸிடோசின்என்ற ஹார்மோன் தூண்டப்பட்டு ஆழ்ந்த இன்ப உணர்வு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

கருமுட்டை உருவாகும் காலத்திற்கு (Ovulation phase) சில நாள்களுக்கு முன்பேகூட ஒருசில பெண்களுக்கு இப்படித் தோன்றத் தொடங்கிவிடும். இயற்கையாகவே பெண்கள் இந்த சமயத்தில் மிகவும் அழகாகவும் பளபளப்பாகவும் ஆகிவிடுவார்கள். ஆணை அவள் பக்கம் ஈர்க்க இதுவும் இயற்கை ஏற்படுத்தியுள்ள வழிதான்

ஆசையின்றி, காதலின்றி, மோகமின்றி, ஒரு பெண்ணின்பால் ஈர்ப்பெதுவும் ஏற்படாமல் ஈடுபடும் காமத்தில் பிறக்கும் குழந்தைகளை விட, இவ்வனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து அதீத காதலுணர்வுடனும் ஈர்ப்புடனும் மனைவியை அணுகி காமத்தில் ஈடுபடும்போது பிறக்கும் குழந்தைகள், உடலளவிலும் செயல்திறனிலும் மனநிலையிலும் சிறந்து விளங்குபவர்களாகவும் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் இந்த உலகத்தை, தங்கள் வாழ்வை எதிர்கொள்பவர்களாக இருப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

மாத விலக்கிற்கடுத்த பதினாறாவது நாளிலிருந்து இருபத்தியெட்டாம் நாள் வரையிருக்கும் நீண்ட கால கட்டத்தைத் தான் லூயூடேல் காலகட்டம் ‘ (Luteal phase) என்றழைக்கிறோம்உடல் ரீதியான சக்தியும் சுறுசுறுப்பும் இந்த சமயத்தில் குறைவாயிருந்தாலும் யோசித்து செய்யக்கூடிய வேலைகள் , திட்டமிடல், சுத்தம் செய்தல், ஒழுங்குபடுத்துதல், ஆழ்ந்து யோசித்தல் போன்றவற்றில் பெண்களின் மனம் லயித்துவிடும்

சிலருக்கு இந்த சிந்தனைகளே அதீத சிந்தனையாகி (Over thinking) அவர்களது மன அமைதிக்கு உலை வைத்துவிடும் அபாயமுமிருப்பதால், பெண்கள் இந்த சமயத்தில், கொஞ்சம்கொஞ்சமல்ல நிறையவே விழிப்புடனிருக்க வேண்டியது அவசியம்தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகாக உடை உடுத்திக் கொள்வதற்கும் வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கும் பெரிய ஆசையோ, ஈடுபாடோ காட்டாமலிருப்பதால், ஆண்கள் தங்கள் மனைவிகள் மீதான ஈர்ப்பு குறைந்து, சுவாரசியமில்லாமல் இந்த கட்டத்தைக் கடந்துவருவார்கள. சிறிது முயற்சி எடுத்துக் கொண்டால், இந்த காலகட்டத்திலும் பெண்கள் பளிச்சென, சுறுசுறுப்போடு வலம் வரலாம்

குழந்தை உருவாக ஏற்ற காலகட்டம் இதுவல்ல என்பதால், பெண்ணுறுப்பில் திரவம் சுரப்பதென்பது அவ்வளவு எளிதாக இருக்காதுஆனால், காதலுணர்வும் கணவனின் தூண்டுதலுமிருந்தால்இந்த சமயத்திலும் கூடலில் உச்சத்தை அடைய முடியும்

இன்னும் சில சமீபத்திய ஆராய்ச்சிகள் மாதவிலக்கு தொடங்குவற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பும், மாதவிலக்கு முடிந்த அடுத்த இரண்டு நாள்களிலும் சில பெண்கள் உறவில் ஈடுபட விரும்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளன. இதற்கு உடலியல் ரீதியாக பெரிய காரணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட, மாதவிலக்கிற்கு இரண்டு நாள்களுக்குப் பின்பும் மாதவிலக்கு முடிந்த அடுத்த இரண்டு நாள்களும் ‘பாதுகாப்பான நாள்கள்அப்போது உறவு வைத்துக் கொண்டால், கர்ப்பமாக வாய்ப்பில்லை’ என்பது மனதில் பதிந்திருப்பதால், அப்போது உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள்குறிப்பாக ஏற்கனவே குழந்தை பெற்றுள்ள பெண்கள் இந்த காலகட்டத்தில் கலவியல் ஆர்வத்துடனிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது

Photo by Dainis Graveris on Unsplash

மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் அழுத்தம், பெண்ணின் பெல்விக்பகுதியிலுள்ள அந்தரங்க உணர்வுப் பகுதியில் (G SPOT) ஒரு இனம் புரியாத கிளர்ச்சியை ஏற்படுத்துவதாலும் அது உடல் உறவிற்கான ஆரம்பக் கட்டத் தூண்டுதலை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறதுகருப்பை விரிவடைந்து, வல்வாவைச் சுற்றியுள்ள பகுதி முழுவதையுமே அங்கிருக்கும் நுண்ணிய நரம்பின் எல்லைவரை சென்று அழுத்துவதால், இதே போன்ற கிளர்ச்சியை அங்கும் ஒரு பெண்ணால் இன்னும் அதிகமாக உணர முடியும்.

இன்னொரு மிக முக்கியமான உளவியல் உண்மை, மாதவிலக்கிற்கு முந்தைய நாள்களில், ஏகப்பட்ட காரணங்கள் கண்டறிய முடியா உணர்வு நிலை மாறுதல்களுக்கு (Mood swings) ஒரு பெண் உள்ளாகும்போது, ஏன் கவலைப்படுகிறோம், ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுகிறாள். அப்போது ஒரு ஆணின் அன்பும் அரவணைப்பும் அருகாமையும் மென்மையான தொடுதலும் ஆறுதலான பேச்சும் மிக மிகத் தேவைப்படுகிறது. அப்போது இவை அத்தனையும் தன் கணவனிடமிருந்து கிடைக்கும்போது அது அடுத்தகட்டமான உடலுறவில் சென்று முடிகிறது

இத்தகைய காலகட்டத்தில் உணர்வு நிலையில் மிக, மிக ஆழமான நிலைக்கு பெண்கள் சென்று விடுவதால், கணவனிடம் உணர்வுரீதியாக மிகவும் நெருக்கமாவும் பாதுகாப்பாகவும் உணர்வதாகச் சொல்கிறார்கள். என்னிடம் இந்தக் கேள்விக்கான பதிலாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பெண்கள், அதாவது மாதவிலக்கிற்கு முந்தைய நாள்களில் தன் மனைவியுடன் காதலாகிக் கசிந்துருகிய கணவர்களைப் பெற்ற பெண்கள் அத்தனை பேருமே, ஒரே மாதிரியாகத்தான் அவனது அன்பையும் பாதுகாப்பையும் காதலையும் உணர்ந்திருக்கிறார்கள்

இந்த சமயத்தில் நிகழும் கூடல் அவர்கள் அனைவருக்குமே மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன் கூடிய ஆனந்தக் கண்ணீருடன்தான் நிறைவடைந்திருக்கிறதுபெண்களுக்கு ஏற்படும் இந்த உடல்நிலை மாற்றங்கள், ஹார்மோன் மாறுபாடுகள், அதனால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், உடலுறவு கொள்ளும் ஆசை மற்றும் தேவைகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் இவைகளையெல்லாம் ஆண்,பெண் இருவருமே தெளிவாகப் புரிந்து கொண்டால், உச்சக்கட்டம் அடையும் சாத்தியக்கூறுகள் நிச்சயமாய் அதிகரிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

கற்றுக்கொண்டால் குற்றமில்லை…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.