UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

தீவிர இடதுசாரிக்கும் மிதவாத இடதுசாரிக்கும் இடையே ஒரு சுவாரஸ்ய உரையாடல்

கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே…

'பல தளங்கள் கொண்ட ஒரு மாளிகை'

“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா?…

மே - டிசம்பர்...

நம் முன்னோர்கள் சொன்னது என்று எத்தனையோ விஷயங்களை நாம் அடி பிசகாமல் பிடிக்கிறதோ இல்லையோ கடைபிடித்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது திருமண பந்தத்தில் ஆணை விடப் பெண் இளையவளாக இருக்க வேண்டும் என்பதுதான்….

கல்வியிலும் மாற்றம் தேவை

1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம்…

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

நீர்க்கட்டிகள்

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு அவர்களின் கணையத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது. சுரப்பு இருந்தாலும் இன்சுலின் எதிர்ப்பு நிலை என்கிற நிலை ஏற்படும். இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படுவதால் பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் பெறுவர். இயல்பாகவே எல்லாருக்கும் தோலுக்கு அடியில் கொழுப்பு இருக்கும். இது இயற்கை. ஆனால், உடல் பருமன் ஏற்படும் போது தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புப் படலத்தின் தடிமனும் கூடுகிறது.

   

 கம்போடியாவில் ஆட்சி செய்த 30 மன்னர்களின் பெயர்களில் ‘வர்மன்’ என்கிற பெயர் தொட்டுக்கொண்டிருப்பது, தமிழின வழித் தோன்றலான நந்திவர்மனைக் குறிப்பிடும் பெயர் என்கிற கருத்தும் உள்ளது. பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்பு நீடித்தது. தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்குப் பெரிய கோயில் கட்டியபோது, அந்தக் கோயில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர் சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.           

வரலாற்றில் கம்போடியா

கம்போடியாவில் 2009இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வு முடிவுகள், கம்போடியாவின் வரலாற்றை கற்காலத்துக்கு  எடுத்துச் சென்று, இப்பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு மட்பாண்டங்கள் தயாரித்து பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. கற்கால வேட்டைக்குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வரையிலான மனித நாகரிக வளர்ச்சியின் சான்றுகள் அகழ்வாய்வின் முடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.