UNLEASH THE UNTOLD

பயணம்

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன

அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள்…

கூட்டைத் துறந்து ஒரு பயணம்

9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…

நன்றிகள் சில...

ஆச்சரிய சுற்றுலா. ஆம். இன்ப சுற்றுலா என்று ஆரம்பித்த எனக்கு, காத்திருந்தன பல ஆச்சரியங்கள். பெண் தோழர்கள் கூடியதும், ‘பாட்டுக்கு பாட்டு’ என்றதும் கீதா தோழர் குறுக்கிட்டு, இரவு சுற்றுலாவின் நோக்கம் குறித்து பேசியது…

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…

மெரினாவில் பெண்கள்

என் குரலில் இருந்த பதற்றம் என்னைவிட ஓட்டுநரை உலுக்கியதுபோல. “அய்யோ மேடம்… ரோடு முழுக்க யு-டர்ன் அடைச்சு வச்சிருக்காங்க. நம்ம இங்க வந்துதான் திருப்பிட்டு போகமுடியும். இதென்ன சின்ன காரா? பைக்கா? சிக்னல் எல்லாத்துலயும்…

ஓர் இரவு

“பெண்கள் பங்கேற்கும் இரவு உலா, முப்பத்தைந்து பெண்கள் செல்ல ஒரு ஏசி பேருந்து வேண்டும்” என்றவுடன் ஏன், எதற்கு, உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று ட்ராவல்…

கதை கதையாம் காரணமாம்

வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா…

சென்னையில் ஓர் இரவு உலா

ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…

இனிது இனிது தனிப்பயணம் இனிது

பணியிடத்தில் மதிய நேர இடைவேளையில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதே வழக்கம். அலைபேசிகள் எல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணவையும் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டே 30-45 நிமிடங்கள் சென்றுவிடும். என்னுடய குழுவில் அனைவருமே பெண்கள்தான்….

சின்னச் சின்னப் பயணங்கள்

பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப்…