UNLEASH THE UNTOLD

கதையும் கவிதையும்

அம்மா, ஸ்கூல்லயிருந்து கூட்டிட்டு வர்றீயா?

“அம்மா… பாரும்மா நந்து இன்னும் தூங்குறான்…” என்று பெரியவன் குரல் கொடுக்க, “நந்து… நந்துக்குட்டி எழுந்து வா…” என்று சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து பெயருக்குக் குரல் கொடுத்துவிட்டு, சமையலைத் தொடர்ந்தேன். அவனிடம் போனால் வேலை முடியாது,…

மூவர்

சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை.

பெரியாச்சி

திடீரென ஏதோ நினைத்துக்கொண்ட ஆத்தா மருமகளிடம் *பல்லுக்கொழுக்கட்ட செஞ்சு கெங்கய நெனச்சி தண்ணியள்ளி ஊத்து” என்றாள். சோகமா என்றெல்லாம் புலப்படவில்லை அந்த முகத்தில். அது என்ன எல்லாத்தயும் விட்டுட்டு பல்லு கொழுக்கட்ட படையலு? தோன்றிய கேள்வியை மனசுக்குள்ளேயே புதைத்தாள்.

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெறிக்கப் போவதாக உன் கைகளும் கால்களுமே…

கவிச்சோலை

உன் அன்பு
அது எப்போதும் இருக்கிறது
அதுதான் என்னைக் கொண்டு செலுத்துகிறது
பலவேளைகளில் எனக்குதான்
அன்பின் முகவரி மறந்துவிடுகிறது

இவள், சமூக மனுஷி

தன் தாயுடன் கிராமம் வந்து சேர்ந்த குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதர்த்தாமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். தான் உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்தார். இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரின் அனுபவங்களும் கனவுகளும் கீதாவை சாதாரண மனுஷியில் இருந்து சமூக மனுஷியாக வளர்த்தது.
ஆம் அந்த கிராமத்துக் குழந்தை கீதா எப்படி சமூக மனுஷியாக மாறினாள்?