ஒரே காதல் ஊரில் இல்லையடா...
காதலியுங்கள், அது தோல்வியுற்றால் மீண்டும், மீண்டும் காதலியுங்கள். இந்தச் சமுதாயம் ஆணாதிக்கமானதுதான். ஆனால், பெண்ணைச் சக தோழியாக மதிக்கும், புரிதல் உள்ள ஆண் தோழர்கள் இங்கு இருக்கிறார்கள்.
காதலியுங்கள், அது தோல்வியுற்றால் மீண்டும், மீண்டும் காதலியுங்கள். இந்தச் சமுதாயம் ஆணாதிக்கமானதுதான். ஆனால், பெண்ணைச் சக தோழியாக மதிக்கும், புரிதல் உள்ள ஆண் தோழர்கள் இங்கு இருக்கிறார்கள்.
மனித மனம் மிகவும் புதிரானது. நிலையான கற்பிதங்களாக எதையும் உறுதிப்படுத்த அதனால் இயலாது. கற்பிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ளத்தான் யாராலும் இயலுவதில்லை.
இந்திய ஆண்களின் ஆழ்மன ஆளுமையில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் ஒன்றை வெற்றிகொண்டு தன்னை யாருக்கோ நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்பாலினத்தை இம்சைக்கு உள்ளாக்குகிறது.
யணங்கள் நமது ஆளுமையைச் செறிவூட்டுகின்றன. மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கின்றன. நமது சுயத்திற்குப் புதிய பரிமாணங்களை அளிக்கின்றன. பரவசமூட்டுகின்றன.
தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை.
மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசு சார்ந்த பணிகளிலும் அலுவலகங்களில், நிறுவனங்களில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், அமெரிக்கா மதச்சார்ப்பற்ற நாடு.
ஹார்மோன்களின் ஆட்டத்தினால் பாலியல் தேவை அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் வீட்டில் பெண்களின் பாலியல் தேவை இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது?
வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன.
ஜாதிப்பெருமை, மதப்பெருமை, இனப்பெருமை, குடும்ப கவுரவம், ஊர் கவுரவம், நாட்டு கவுரவம் என்று எல்லா வெற்றுப் பெருமைகளும் பெண்ணின் கர்ப்பையில் தான் குடியிருக்கின்றன.
ஓவ்யூலேசன் சமயத்தில் காமத்தை சரிவரக் கையாள்வதால் உண்டாகும் அமைதி அந்த மாதத்தையே மகிழ்ச்சியாக்கும். காமத் தேவை இல்லாதபோது பெண்ணைப் புணர்வது தேவையில்லாத ஆணி!