ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்- 8
தெரிந்தவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான்.
தெரிந்தவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான்.
கனடா வந்ததிலிருந்து பலமுறை நினைத்த காட்சிகள் எல்லாம் இப்போது காணாமல் போய், எல்லையற்ற வானமும் அதற்குக் கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிரவாகமாகத் தண்ணீரும்!
கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!
” உன்னை மற்றவங்க வாயாடின்னு சொன்னா உனக்கு மொழிவளம் அதிகமா இருக்குதுன்னு அர்த்தம். மொழி சார்ந்த திறமைகளை வளர்த்துக்கோ.”
பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.
வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.
“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.
வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.
கனடாவில் ஆட்டோமேடிக் கார் என்பதால் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்தவுடன் என் எண்ணத்தைத் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டேன்!
ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!