UNLEASH THE UNTOLD

முகங்கள்

'பாஸிட்டிவ்' கௌசல்யா

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

இறந்த பறவைகளைத் தேடிச் செல்லும் கிருபா நந்தினி

ஒரு பெண் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்குவதே சவால்தான். அதிலும் காட்டில், மலைப் பகுதியில், கிராமத்தில், கடற்கரை ஓரங்களில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதும் அங்குள்ள சூழல்களைச் சமாளிப்பதும் சவாலான பணிதான். இறந்த பறவைகளின் காரணம் தேடிச் செல்வது மிகவும் சவாலான பணி.

கரிக்காரன்புதூரிலிருந்து ஒரு ஐஏஎஸ்!

என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

மக்களுக்காகப் போராடும் நீலக்குயில்

அன்றைய புதுக்கோட்டை மாவாட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத், நீலாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீலா இருக்கிறாரா?’என்று கேட்டார்.

முகங்கள் - 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி

போராட்டங்கள் ஓய்வதில்லை

”சராசரி மனிதராக இல்லாமல், சமூகச் சிந்தனைகொண்ட மனுஷியாக நான் மாற தொழிற்சங்கமே காரணம். சமூக முன்னேற்றத்தில் என் பங்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.”

Manicka thaai

சைக்கிள் என்பது வெளி உலகைக் காணும் வாசல்!

வழக்கு தொடுத்து, கல்குவாரியில் வேலை செய்யும் பெண்களே அதை எடுத்து நடத்தும்படி ஏற்பாடு செய்தோம். நெடுவாசல் கிராமத்தில் சாராய ஒழிப்பு இயக்கம் நடத்தி வெற்றி கண்டோம்

சமத்துவமும் சுதந்திரமும் நிறைந்த வாழ்க்கை!

பூங்கோதை 1996-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் அறிவொளி திருவிழா நடந்துகொண்டிருந்தது. அங்குதான் கணித விஞ்ஞானி ராமானுஜம் பூங்கோதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பூங்கோதையின் சொந்த ஊர் துறையூருக்கு அருகில் உள்ள கீரம்பூர் கிராமம். அப்பாவும் அம்மாவும்…

சிறகு முளைத்த பெண்கள்

இந்தச்சமூகம் முன்னேறிவிட்டதாக, பெண்கள் எல்லோரும் கல்வியில் தேர்ந்தவர்களாகவும் பொதுவெளியில் தங்கள் அறிவையும் ஆற்றலையும் தடையேதுமின்றி வெளிப்படுத்துகிற சூழல் நிலவுவதாகவும் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது. பெண்கள் பலரும் பாலின அடிப்படையில் தாங்கள் திறமையற்றவர்களாக மதிப்பிடப்படுகிற அவமதிப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

துன்பங்களுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது

நான் 35 ஆண்டுகளாகச் சமூகப் பணி செய்து வருகிறேன். இதன் மூலம் ஏராளமான பெண்களை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களில் என்னைப் பாதித்த, என்னை வியக்க வைத்த, வெளியுலகத்துக்குத் தெரியாத பெண்களை இங்கே அறிமுகம் செய்ய இருக்கிறேன்.